மே 19, 2018
பத்மஸ்ரீ டாக்டர் விட்டல்ராவ் விக்கி பாட்டில் கூட்டுறவு வங்கி லிமிடெட்,
நாசிக், மஹாராஷ்டிராவிற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் உத்தரவுகள்
நாசிக், மஹாராஷ்டிராவில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் விட்டல்ராவ் விக்கி பாட்டில் கூட்டுறவு வங்கி லிமிடெட், மே 18, 2018 தேதியிட்ட DCBS.CO.BSD-I/D-4/12.22.126/2017-18 உத்தரவின்படி, இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் கீழ் உள்ளது. இந்த வழிகாட்டுதல்களின்படி, வைப்புதாரர்கள் ஒவ்வொரு சேமிப்பு கணக்கு அல்லது நடப்புக் கணக்கு அல்லது வேறு எந்த வைப்புத்தொகை கணக்கில் வைத்திருக்கும் மொத்தத் தொகையிலிருந்து நிபந்தனைகளுக்குட்பட்டு ரூ. 1000 (ரூபாய் ஆயிரம் ரூபாய்) வரை திரும்ப எடுக்கலாம். மே 18, 2018 தேதியிட்ட ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி, ரிசர்வ் வங்கியிடமிருந்து எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் பெறாமல், பத்மஸ்ரீ டாக்டர் விட்டல்ராவ் விக்கி பாட்டில் கூட்டுறவு வங்கி லிமிடெட் எந்தவொரு கடனையும் வழங்க முடியாது அல்லது புதுப்பிக்க முடியாது, எந்தவொரு முதலீடு செய்வதோ, நிதிகளின் மீது கடன் மற்றும் புதிய வைப்புகளை ஏற்றுக்கொள்ளுதல், செலவு செய்தல் அல்லது ஏதேனும் கட்டணம் செலுத்துதல், பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுதல் அல்லது வேறு எந்தவொரு சமரச உடன்படிக்கைகள், சொத்துக்களை விற்றல், மாற்றல் ஆகியவற்றை மே 18, 2018 தேதியிட்ட வழிகாட்டுதலில் குறிப்பிட்டுள்ளபடியன்றி, மேற்கொள்ள முடியாது. மே 19, 2018 அன்று வேலைநேர முடிவிலிருந்து இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
இந்த வழிகாட்டுதல் உத்தரவு வெளியிடப்பட்டதன் காரணமாக, மேற்படி வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துவிட்டதாகக் கருதக் கூடாது. அதன் நிதி நிலை முன்னேற்றமடையும் வரை கட்டுப்பாடுகளுக்குட்பட்டு வங்கி, தனது வர்த்தகத்தைத் தொடர்ந்திடும். சூழ்நிலைகளைப் பொறுத்து இந்திய ரிசர்வ் வங்கி இந்த வழிகாட்டுதல்களை மாற்றியமைக்கலாம்.
வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS – கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும்)-ன் பகுதி 35A உப பிரிவு 1-ன் (உடன் பிரிவு 56-ஐயும் படிக்கவும்) கீழ் இந்திய ரிசர்வ் வங்கிக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. பொதுமக்கள் பார்வையிடும் வண்ணம் உத்தரவுகளின் பிரதி, வங்கியின் வளாகத்தில் அறிவிப்புப் பலகையில் வைக்கப்படும்.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிகை வெளியீடு: 2017-2018/3044 |