2 வங்கிசாரா நிதிநிறுவனத்தின் பதிவுச் சான்றிதழ்களை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது |
மே 25, 2018
2 வங்கிசாரா நிதிநிறுவனத்தின் பதிவுச் சான்றிதழ்களை
இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது
1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-IA-(6)-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, கீழே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களுக்கு, வங்கிசாரா நிதி நிறுவனமாகத் தனது வியாபாரத்தை மேற்கொள்ள அளிக்கப்பட்ட பதிவுச் சான்றிதழ்களை ரத்து செய்துள்ளது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
அலுவலக முகவரி |
பதிவுச் சான்றிதழ் எண் |
வழங்கப்பட்ட தேதி |
ரத்து செய்த ஆணை தேதி |
1. |
M/s. ஜே கே டிரான்ஸ்போர்ட்டர்ஸ் & ஃபைனான்ஸியர்ஸ் (பி) லிமிடெட் |
குருத்வாரா பில்டிங் அமீரா கடல் ஸ்ரீநகர் 190001 |
B-1100046 |
மே 30, 2001 |
மே 02, 2018 |
2. |
M/s. ஜே கே கிரெடிட் & இன்வெஸ்ட்மென்ட் (பி) லிமிடெட் (முன்பு M/s. ஹெல்பேஜ் கிரெடிட் & இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட்) |
ஹால் எண் 103 வடக்கு பிளாக் பஹூ ப்ளாசா ரெயில்ஹெட் காம்ப்ளெக்ஸ் ஜம்மு 180012 |
B-1100059 |
நவம்பர் 27, 2001 |
மே 02, 2018 |
எனவே, மேற்குறிப்பிடப்பட்டுள்ள கம்பெனிகள், 1934-ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-I பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/3089 |
|