மே 28, 2018
இந்திய ரிசர்வ் வங்கி, ருபீ கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், பூனே வங்கிக்கு
வழிகாட்டுதல் உத்தரவுகளின் கால அளவு நீட்டிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி, ருபீ கோ-ஆபரேடிவ் வங்கி லிமிடெட், பூனே வங்கிக்கு, மே 23, 2018 தேதியிட்ட உத்தரவு எண் DCBR.CO.AID/D-42/12.22.218/2017-18-ன்படி வழிகாட்டுதல்களின் கால அளவை மேலும் மூன்று மாதங்களுக்கு ஜுன் 01, 2018 முதல் ஆகஸ்டு 31, 2018 வரை மறு ஆய்வுக்குட்பட்டு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. முன்னர், பிப்ரவரி 22, 2013 முதல் ஆகஸ்டு 21, 2013 வரை வழங்கப்பட்டிருந்த உத்தரவு, மேலும் எட்டு முறை ஒவ்வொரு முறையும் ஆறு மாதங்களுக்கும், நான்கு முறை ஒவ்வொரு முறையும் மூன்று மாதங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. நவம்பர் 22, 2017 முதல் மே 31, 2018 வரை கடைசியாக ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கட்டிருந்தது.
இந்திய ரிசர்வ் வங்கி, இவ்வங்கிக்கு, வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் பிரிவு 35A இன் உப பிரிவு (1) உடன் பிரிவு 56 இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, வழிகாட்டுதல் உத்தரவுகளை வழங்கியது. உத்தரவின் நகல் பொதுமக்களின் பார்வைக்காக வங்கியின் வளாகத்தில் வைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவுகளில் திருத்தங்கள், மாற்றங்கள் வெளியிடப்படுவதன் காரணமாக, இந்திய ரிசர்வ் வங்கி, இந்த வங்கியின் உரிமத்தை ரத்து செய்ததாகக் கருதக்கூடாது. தொடர்ந்து கட்டுப்பாடுகளுக்குட்பட்டு இவ்வங்கி வங்கி வர்த்தகத்தை, நிதிநிலைமையில் முன்னேற்றம் ஏற்படுத்தும் வரை மேற்கொள்ளலாம். சூழ்நிலைகளுக்கேற்ப இந்திய ரிசர்வ் வங்கி, இந்த உத்தரவுகளில் மாற்றங்களைக் கொண்டுவரலாம்.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு: 2017-2018/3106 |