Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (267.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 05/06/2018
இந்திய ரிசர்வ் வங்கி, அபையுதயா மஹிலா நகர கூட்டுறவு வங்கி லிமிடெட்,
சன்னப்பட்டணா, கர்நாடகா மீது அபராதம் விதிக்கிறது

ஜுன் 05, 2018

இந்திய ரிசர்வ் வங்கி, அபையுதயா மஹிலா நகர கூட்டுறவு வங்கி லிமிடெட்,
சன்னப்பட்டணா, கர்நாடகா மீது அபராதம் விதிக்கிறது

அபையுதயா மஹிலா நகர கூட்டுறவு வங்கி லிமிடெட், சன்னப்பட்டணா, கர்நாடகா வங்கி மீது இந்திய ரிசர்வ் வங்கி ரூ. 1.00 லட்சம் பண அபராதத்தை, வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 47 A (1) (c) மற்றும் 46(4) (i) உடன் இணைந்த கருத்தின்படி, இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட ஏப்ரல் 29, 2003 தேதியிட்ட முதன்மைச் சிற்றறிக்கை எண் BPD Cir. 50/13.05.00/2002-03-ல் பாரா 3-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள “வங்கி இயக்குநர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்குக் கடன்களை வழங்குவதில், வரம்பு ஆகியவை” குறித்த ஆணைகள் / வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை மேற்குறிப்பிட்ட வங்கி பின்பற்றாத காரணத்தால் மேற்படி வங்கிக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் கோரும் அறிவிப்பை வழங்கியது. வங்கி பதிலை எழுத்து மூலமாக அளித்தது. இந்த விஷயத்தில் உண்மைகளைப் பரிசீலித்த பிறகும் மற்றும் இது தொடர்பாக வங்கி தனிப்பட அளித்த பதிலை ஆராய்ந்த பின்னரும், மீறல்கள் தண்டனைக்குரியவையே என்று இந்திய ரிசர்வ் வங்கி முடிவெடுத்து அபராதத்தை விதித்துள்ளது.

(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்

பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/3182

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்