ஜுன் 06, 2018
இந்திய ரிசர்வ் வங்கி, 510 இராணுவ தளப் பட்டறைக் கடன் கூட்டுறவு முதன்மை
வங்கி லிமிடெட், மீரட் கன்டோன்மெண்ட் (510 Army Base Workshop Credit
Co-operative Primary Bank Ltd.) வங்கி மீது அபராதம் விதிக்கப்படுகிறது
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949-ன் (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 47 A (1) (c) மற்றும் 46 (4) உடன் இணைந்த கருத்தின்படி, இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, 510 இராணுவ தளப் பட்டறைக் கடன் கூட்டுறவு முதன்மை வங்கி லிமிடெட், மீரட் கன்டோன்மெண்ட் வங்கியின் மொத்த வெளிப்பாடு மற்றும் வரம்பில் ப்ருடென்ஷியல் நெறிமுறைகள், கடன் தகவல் கம்பனிகளின் உறுப்பினர் (CICs) பெறுதல், முதலீட்டுத் துறை மற்றும் வைப்புத்தொகை கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி ஆகியவற்றின் தணிக்கை போன்றவற்றின் அறிவுறுத்தல்கள் / வழிகாட்டுதல்களை மீறியதற்காக, ரூ. 5.00 லட்சம் (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) பண அபராதத்தை விதித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் கோரும் அறிவிப்பை வெளியிட்டது. வங்கி பதிலை எழுத்து மூலமாக அளித்தது. இந்த விஷயத்தில் உண்மைகளைப் பரிசீலித்த பிறகும் மற்றும் இது தொடர்பாக வங்கி அளித்த தனிப்பட்ட பதிலை ஆராய்ந்த பின்னரும், மீறல்கள் தண்டனைக்குரியவையே என்று இந்திய ரிசர்வ் வங்கி முடிவெடுத்து அபராதத்தை விதித்துள்ளது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/3186 |