ஜுன் 08, 2018 இந்திய ரிசர்வ் வங்கியால் தி செகந்தராபாத் கோ-ஆபரேடிவ் அர்பன் வங்கி லிமிடெட், ஹைதராபாத், தெலங்கானா மீது பண அபராதம் விதிக்கப்படுகிறது
வங்கியியல் ஒழுங்குமுறைச்சட்டம் 1949-ன் (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) சட்டப்பிரிவு எண் 47 A (1) (c) மற்றும் 46 (4)-ன்படி, இந்திய ரிசர்வ் வங்கிக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, தானியங்கி பண இயந்திரங்கள் (ஏடிஎம்) நிர்மாணிக்கப்பட்டதில், திருத்தப்பட்ட மேற்பார்வை செயல்முறை கட்டமைப்பிற்கு (SAF) அறிவுறுத்தப்பட்ட கட்டுப்பாடுகள், வெளிப்பாட்டு நெறிமுறைகள், தவறான தகவலை ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்தல் மற்றும் ஆய்வின்போது சம்பந்தப்பட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்காதது போன்ற இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்கள் / வழிமுறைகளை மீறியதற்காக, இந்திய ரிசர்வ் வங்கி, தி செகந்தராபாத் கோ-ஆபரேடிவ் அர்பன் வங்கி லிமிடெட், ஹைதராபாத், தெலங்கானா வங்கியின் மீது ரூ. 2,50,000 (ரூபாய் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) பண அபராதத்தை விதித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி விளக்கம் கோரும் அறிவிப்பை வழங்கியது. வங்கி பதிலை எழுத்து மூலமாக அளித்தது. இந்த விஷயத்தில் உண்மைகளைப் பரிசீலித்த பிறகும் மற்றும் இது தொடர்பாக வங்கி தனிப்பட அளித்த பதிலை ஆராய்ந்த பின்னரும், மீறல்கள் தண்டனைக்குரியவையே என்று இந்திய ரிசர்வ் வங்கி முடிவெடுத்து அபராதத்தை விதித்துள்ளது.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு – 2017-2018/3224 |