டிசம்பர் 11, 2017
பேராசிரியர் விஜய் ஜோஷி, எம்ரீஷியஸ் ஃபெல்லோ, மெர்டன் கல்லூரி, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகம் வழங்கிய பதினைந்தாவது எல். கே. ஜா நினைவு விரிவுரை“ இந்தியாவின் பொருளாதர சீர்திருத்தங்கள்: “முடிவுறாத நிகழ்ச்சி நிரலின் பிரதிபலிப்பு.”
இந்திய ரிசர்வ் வங்கி எல்.கே.ஜா வின் பதினைந்தாவது நினைவு விரிவுரையை டிசம்பர் 11, 2017 அன்று நடத்தியது. எம்ரீஷியஸ் ஃபெல்லோ, மெர்டன் கல்லூரி, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகத்தின் பேராசிரியர். விஜய் ஜோஷி அவர்களால் இவ் விரிவுரை வழங்கப்பட்டது. ஆளுநர் டாக்டர் உர்ஜித் படேல் விருந்தினர்களை வரவேற்றார். மற்றும் ரிசர்வ் வங்கியால் 1990 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட எல்.கே. ஜா நினைவு விரிவுரையின் முக்கியத்துவத்தை சிறப்பித்துக் கூறினார்.
பேராசிரியர் விஜய் ஜோஷி இந்தியாவைப் பற்றி பல புத்தகங்கள்எழுதியுள்ளார்.அவற்றில் சில: இந்தியாவின் நீண்ட சாலை, வளத்தைத் தேடல் (பெங்குவின் இந்தியா,புதுதில்லி 2016; மேலும் O.U.P நியூ யார்க் 2017) இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்கள்:1991-2001(O.U.P..,க்ளாரண்டன் அச்சகம்,ஆக்ஸ்போர்டு , 1996) மற்றும் இந்தியா மேக்ரோ பொருளாதாரம் மற்றும் அரசியல் பொருளாதாரம், 1964-1991, (உலக வங்கி மற்றும் O.U.P 1994) அவர் அவ்வப்பொழுது பல்வேறு அலுவலக மற்றும் தொழில் ரீதியிலான பதவிகளையும், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநருக்கு சிறப்பு ஆலோசகர் உட்பட பல்வேறு பணிகளை வகித்தார். இந்திய நிதிஅமைச்சகத்தின் சிறப்பு அதிகாரி, இந்திய முதலீட்டு அறக் கட்டளை J.P.மோர்கனின் இயக்குநராகவும், மற்றும் உலக வங்கி உட்பட பல சர்வதேச நிறுவனங்களுக்கான ஆலோசகராகவுமிருந்திருக்கிறார். இவர் செயல்வாழ்வின் குறிக்கோள் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகத்தில் மேக்ரோ பொருளாதாரம், உலகப் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிப் பொருளாதாரம் ஆகிய துறைகளில் கற்பிப்பதுடன் ஆராய்ச்சியும் மேற்கொண்டிருப்பதுமாகும்.
பேராசிரியர் ஜோஷியின் விரிவுரை “இந்திய பொருளாதார சீர்திருத்தங்கள் முடிவுறாத நிகழ்ச்சி நிரலின் பிரதிபலிப்பு”என்ற தலைப்பில் https://www.rbi.org.in இல் கிடைக்கும்.
(ஜோஸ் J. காட்டூர்)
தலைமைப் பொதுமேலாளர்
பத்திரிக்கை வெளியீடு –2017-2018/1588
|