ஜூலை 04, 2018
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS) பகுதி 35 A ன்
கீழ், அமர்நாத் கூட்டுறவு வங்கி லிமிடெட், பெங்களூருக்கு அளிக்கப்பட்ட அனைத்து
வழிகாட்டுதல்களையும் உள்ளடக்கிய உத்தரவுகளை நீட்டித்தல்.
இந்திய ரிசர்வ் வங்கி பொதுநலன் கருதி, பொது மக்கள் தகவலுக்காக, அமர்நாத் கூட்டுறவு வங்கி லிமிடெட் பெங்களூருக்கு ஏப்ரல் 1, 2013 தேதியிட்ட வழிகாட்டுதல் உத்தரவினை மற்ற உத்தரவுகளுடன் சேர்த்து கால நீட்டிப்பு செய்து அவசியம் எனக்கருதி, கடைசியாக டிசம்பர் 21, 2017 வழங்கப்பட்ட உத்தரவை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (AACS) –ன் பிரிவு (1) 35 A ன் கீழ் அனைத்து வழிகாட்டுதல்களையும் உள்ளடக்கி, அமர்நாத் கூட்டுறவு வங்கி லிமிடெட், பெங்களூருக்கு ஏப்ரல் 1, 2013 தேதியிட்ட அவ்வப்போது மாற்றங்கள் செய்த மதிப்பாய்வுக்கு உட்பட்ட வழிகாட்டுதல் உத்தரவை, ஜூலை 04, 2018 வரை நீட்டிக்கப்பட்ட வழிகாட்டுதல் உத்தரவை ஜூலை 05, 2018 முதல் ஜனவரி 04, 2019 வரை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கிறது.
வழிகாட்டுதல் உத்தரவின் மற்ற விதிமுறைகளும் நிபந்தனைகளும் மாறாமல் இருக்கும். இந்த வழிகாட்டுதல் உத்தரவு வெளியிட்டதன் காரணமாக, மேற்படி வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்து விட்டதாகக் கருதக் கூடாது. அதன் நிதி நிலை முன்னேற்றமடையும் வரை கட்டுப்பாடுகளுக்குட்பட்டு, வங்கி தனது வர்த்தகத்தைத் தொடர்ந்திடும். சூழ்நிலைகளைப் பொருத்து, இந்திய ரிசர்வ் வங்கி இந்த வழிகாட்டுதல்களை மாற்றியமைக்கலாம்.
(அஜித் பிரசாத்)
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு – 2018-2019/23 |