தேதி: ஜூலை 04, 2018
போலியான மின்னஞ்சல்கள் குறித்து ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
ரிசர்வ் வங்கியின் பெயரை பயன்படுத்தி தவறான செயல்பாடுகள் மற்றும் பொது மக்களை மோசடி செய்வது குறித்து ரிசர்வ் வங்கி அவ்வப்போது வலியுறுத்தி வருகிறது. இந்த சக்திகள் ரிசர்வ் வங்கியின் அதிகார பூர்வ கடித வடிவமைப்பை பயன்படுத்துகின்றன. ரிசர்வ் வங்கியின் ஊழியர்களாக ஆள்மாறாட்டம் செய்து மின்னஞ்சல்களை அனுப்புகின்றன மற்றும் போலியான சலுகைகள் / லாட்டரி பரிசுகள் வெளிநாட்டிலிருந்து அந்நிய செலாவணியை/ மலிவானநிதியைஅனுப்புவது போன்றவைகளால் பொது மக்களை கவர்ந்திழுக்கின்றன. நாணய செயலாக்க கட்டணம், அந்நியசெலாவணி நாணய மாற்று கட்டணம், முன்கூட்டியே செலுத்துதல் போன்ற முறைகளில் தங்கள் பணத்தை இழந்து பொது மக்கள் ஏமாறுகிறார்கள். பொது மக்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்புதல், வெளிப்புற விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு திரைப்படங்களை ஒளிபரப்புதல் போன்ற பல்வேறு முறைகள் மூலம் போலியான மின்னஞ்சல்கள் குறித்து ரிசர்வ் வங்கி அதன் ‘பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தின்’ ஒரு பகுதியாக விழிப்புணர்வை பரப்பி வருகிறது.
ரிசர்வ் வங்கி பின்வருவனவற்றை மீண்டும் வலியுறுத்துகிறது:
-
ரிசர்வ் வங்கி தனிநபர்களுக்கான எந்த கணக்கையும் வைத்திருக்கவில்லை.
-
ரிசர்வ் வங்கியின் அதிகாரிகளின் பெயரில் ஆள்மாறாட்டம் செய்யப்படுவது குறித்து எச்சரிக்கையாக இருங்கள்
-
ரிசர்வ் வங்கியைச் சேர்ந்த எவரும் வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட லாட்டரியை வென்ற மலிவான நிதிகுறித்து மக்களை அழைப்பதில்லை.
-
லாட்டரி நிதி போன்றவற்றை வழங்குவதை அறிவிக்கும் எந்த மின்னஞ்சல்களையும் ரிசர்வ் வங்கி அனுப்புவதில்லை.
-
லாட்டரி வெற்றி போன்ற போலியான சலுகைகள் அல்லது வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட நிதிகள் குறித்து தொடர்பு கொள்ள ரிசர்வ் வங்கி எந்த எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சலை அனுப்புவதில்லை.
-
இந்திய ரிசர்வ் வங்கியின் ஒரே அதிகாரப்பூர்வ மற்றும் உண்மையான வலைத்தளம் (https://www.rbi.org.in/ அல்லது https://rbi.org.in/) மற்றும் பொது ஜனங்கள்/மக்கள் கவனமாக இருக்கவும் போலி சின்னங்களால்’ ரிசர்வ் வங்கி’ என தொடங்கி இதே போன்ற முகவரிகளுடன் போலி வலைத்தளங்களால் தவறாக வழிகாட்டுதலை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-
இது போன்ற மோசடிகள் குறித்து உடனடியாக உள்ளூர் காவல்துறை அல்லது சைபர் கிரைம் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவும்.
அத்தகைய நபர்கள் / நிறுவனங்களிடமிருந்து பெறும் தகவல் தொடர்புக்கு பதிலளிக்க வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கியின் பெயரில் மோசடி மின்னஞ்சல்களுக்கு இரையாக வேண்டாம் என்றும் பொது மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஜோஸ் ஜே. கட்டூர்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2018-2019/34
தொடர்புடைய செய்தி வெளியீடுகள் / அறிவிப்புகள் |
ஜூன் 12,2018 |
‘ரிசர்வ் வங்கி வலைத்தளம் தவிற பிற வழிகளிலிருந்து பெறப்பட்ட வேலைவாய்ப்பு தொடர்பான தகவல் தொடர்பு’ குறித்து வேலை தேடுவோர்களை ரிசர்வ் வங்கி எச்சரிக்கிறது. |
பிப்ரவரி 8,2018 |
RBI பெயரில் வரும் போலி வலைத்தளங்கள் குறித்து ரிசர்வ் வங்கி எச்சரிக்கிறது |
ஏப்ரல் 11, 2015 |
‘அனைத்து வங்கி இருப்பு விசாரணை(All bank balance enquiry) ’ பயன்பாட்டை ரிசர்வ் வங்கி எச்சரிக்கிறது |
ஜனவரி 01,2015 |
மல்டி லெவல் மார்கெட்டிங் நடவடிக்கைகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி பொது மக்களை எச்சரிக்கிறது |
நவம்பர் 21,2014 |
ரிசர்வ் வங்கியின் பெயரில் கிரெடிட் கார்டு: அதன் பெயரில் நிகழ்த்தப்பட்ட புதிய வகையான மோசடி குறித்து ரிசர்வ் வங்கி மீண்டும் எச்சரிக்கிறது |
மே 26,2014 |
ஆர்பிஐ தனது பெயரில் போலி வலைத்தளம் பற்றி எச்சரிக்கிறது |
அக்டோபர் 15,2012 |
ரிசர்வ் வங்கி அதன் பெயரில் அனுப்பப்படும் ஃபிஷிங் மெயிலுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று பொது மக்களை எச்சரிக்கிறது |
செப்டம்பர்14 ,2012 |
உங்கள் இணைய வங்கி கணக்கு விவரங்களைக் கேட்கும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க வேண்டாம். பொது மக்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை |
மே 21,2012 |
ஃபிஷிங் மின்னஞ்சல்களைப் பற்றி ரிசர்வ் வங்கி எச்சரிக்கை |
பிப்ரவரி 06,2012 |
போலியான சலுகைகளுக்கு எதிராக பொது மக்களை மீண்டும் ரிசரிவ் வங்கி எச்சரிக்கிறது |
எப்ரல் 05,2011 |
ரிசர்வ் வங்கி உங்கள் வங்கி கணக்கு விவரங்களை ஒரு போதும் கேட்காது |
பிப்ரவரி 15,2011 |
வெளிநாட்டிலிருந்து பெரிய நிதியைப் பெற பணம் செலுத்த வேண்டாம். ஆர்பிஐ ஆலோசனை |
மே 28,2010 |
நிதி பரிமாற்றத்தின் போலியான சலுகைகளுக்கு இரையாகாதீர்கள் ஆர்பிஐ ஆலோசனை |
மே 26,2010 |
லாட்டரி, பணப் புழக்கத் திட்டங்கள்,மலிவான நிதிகளின் போலியான சலுகைகள் போன்றவற்றில் பங்கேற்பதற்கான பணம் அனுப்புதல். |
ஜூலை 30,2009 |
போலியான சலுகைகள்/லாட்டரி வெற்றிகள்/மலிவான நிதி சலுகைகள் குறித்து எச்சரிக்கை: ஆர்பிஐ |
டிசம்பர் 07,2007 |
வெளிநாட்டிலிருந்து மலிவான நிதியை அனுப்பும் போலியான சலுகைகளுக்கு எதிராக ஆர்பிஐ பொது மக்களை எச்சரிக்கிறது |
|