ஜூலை 06, 2018
வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 ன் (AACS) சட்டப்பிரிவு எண்35 A(1) உடன்
பிரிவு 56 ன்படி –பில்வாரா மஹிளா நகர்ப்புற கூட்டுறவு வங்கி லிமிடெட், பில்வாரா
(ராஜஸ்தான்) வழிகாட்டுதல் உத்தரவுகள்
இந்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களின் நலனைக்கருத்தில் கொண்டு, பில்வாரா மஹிளா நகர்ப்புற கூட்டுறவு வங்கி லிமிடெட் ,பில்வாரா (ராஜஸ்தான்) வுக்கு வழங்கப்பட்ட உத்தரவின் செயல்பாட்டுக் காலத்தை வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 ன் பிரிவு 35 இன் துணைப்பிரிவு (1) னுடன் பிரிவு (56) உடன், இந்திய ரிசர்வ் வங்கி இதன் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி பொதுநலனுக்காக நீட்டிக்கப்படுவதை இதன் மூலம் அறிவிக்கிறது. மார்ச் 10 , 2017 அமல்படுத்தப்பட்ட DCBS, CO BSD – 1V – D-9 /12.27.235/2016-17 மார்ச் 7.2017 தேதியிட்ட வழிகாட்டுதல் உத்தரவானது, கடைசியாக மார்ச் 10, 2018 முதல் ஜுலை 09, 2018 வரை நீட்டிக்கப்பட்டு, மார்ச் 10, 2018 தேதியிட்ட வழிகாட்டுதல் உத்தரவு எண். DCBR. CO. AID/N0. D-32/12.27.235/2017-18 ன் படி, ஜூலை 02, 2018 தேதியிட்ட ஆணை எண் DCBR. CO. AID/N0-.4/12.27.235/2018-19-ன்படி மறு ஆய்வுக்கு உட்பட்டு மேலும் ஜூலை 10, 2018 முதல் அக்டோபர் 09.2018 வரை தொடர்ந்து நீடிக்கும்.
வழிகாட்டுதல் உத்தரவின் மற்ற விதிமுறைகளும் நிபந்தனைகளும் மாறாமல் இருக்கும்.
அஜித் பிராசாத்
உதவி ஆலோசகர்
பத்திரிக்கை வெளியீடு:-2018-2019/68 |