தேதி: செப்டம்பர் 18, 2018
நாகர் சஹகாரி வங்கி லிமிடெட், கோரக்பூர், உத்தரபிரதேசம் –
அபராதம் விதிக்கப்பட்டது
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நாகர் சாஹ்கரி வங்கி லிமிடெட் மீது, இந்திய ரிசர்வ் வங்கி வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தும் வகையில்) பிரிவு 47 A (1)(c) மற்றும் பிரிவு 46 (4) உடன் கூடிய விதிமுறைகளின் கீழ் “உங்கள் வாடிக்கையாளர் அறிந்து கொள்” வதற்கான ரிசர்வ் வங்கியின் (KYC) அறிவுறுத்தல்கள் / வழிகாட்டுதல்களை மீறியதற்காக, ₹ 2,00,000/- (ரூபாய் இரண்டு லட்சம் மட்டும்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்கு பதிலளித்து வங்கி எழுத்துப்பூர்வ பதிலை சமர்ப்பித்தது. ரிசர்வ் வங்கி, உண்மைகளைப் பரிசீலித்த பின்னர், வங்கியின் விதிமீறல்கள் நிரூபிக்கப்பட்டன என்ற முடிவுக்கு வந்து அபராதம் விதிக்க தேவை என்ற முடிவுக்கு வந்தது.
அஜித் பிரசாத்
உதவி ஆலோசகர்
செய்தி வெளியீடு: 2018-2019/645 |