தேதி: ஜனவரி 14, 2019
பஜாஜ் நிதி லிமிடெட் மீதுஇந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது
செப்டம்பர் 01, 2016 தேதியிட்ட மாஸ்டர் டைரக்க்ஷன் DNBR.PD.008/03.10.119/2016-17 படி நியாயமான நடைமுறைக் குறியீட்டை மீறியதற்காக பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் (என்.பி.எஃப்.சி) மீதுஜனவரி 03, 2019 தேதியிட்ட உத்தரவின் மூலம் இந்திய ரிசர்வ் வங்கி ₹ 10.0 மில்லியன் அபராதம் விதித்துள்ளது. இந்தியரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 இன் 58 பி பிரிவின் துணைப்பிரிவு 5 (அ) உடன் இணைந்த பிரிவு 58 ஜி (1) (பி) இன் விதிகளின் கீழ் இந்தியரிசர்வ் வங்கியில் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் NBFC தனது வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லும் தன்மையை பாதிக்கும் நோக்கத்தில் இல்லை.
அனிருதா டி.ஜாதவ் உதவி மேலாளர்
செய்தி வெளியீடு: 2018-2019/1645
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்