Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (108.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 24/01/2019
பாக்யோதயா பிரண்ட்ஸ் அர்பன் கோ ஆபரேடிவ் வங்கி லிமிடெட், வாரூட், அமராவதி, மாவட்டம் மகாராஷ்டிராத்திற்கு ரிசர்வ் வங்கி உத்தரவுகளை வெளியிடுகிறது

தேதி: ஜனவரி 24, 2019

பாக்யோதயா பிரண்ட்ஸ் அர்பன் கோ ஆபரேடிவ் வங்கி லிமிடெட், வாரூட், அமராவதி, மாவட்டம் மகாராஷ்டிராத்திற்கு ரிசர்வ் வங்கி உத்தரவுகளை வெளியிடுகிறது.

பாக்யோதயா பிரண்ட்ஸ் அர்பன் கோ ஆபரேடிவ் வங்கி லிமிடெட், வாரூத்,அமராவதிமாவட்டம் மகாராஷ்டிராவிற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஆறு மாத காலத்திற்கு வழிகாட்டுதல் உத்தரவுகளை வெளியிட்டுள்ளது. ஜனவரி 17, 2019 அலுவல் நேர முடிவிலிருந்து இந்த வழிகாட்டுதல் உத்தரவு அமலாக்கம் செய்யப்படுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வைப்புதாரர்கள், ஒவ்வொரு சேமிப்புக் கணக்கு / நடப்புக் கணக்கு / வேறு ஏதேனும் வைப்புக் கணக்கு, இவ்வாறு எந்தப் பெயரில் இருந்தாலும், மொத்த வைப்புத் தொகையிலிருந்து திரும்பப்பெறும் தொகை ரூ. 2,000/- க்கு (ரூபாய் இரண்டாயிரம் மட்டும்) அதிகமாகாமல் இருக்கும்படி ஜனவரி 17, 2019 தேதியிட்ட ரிசர்வ் வங்கியின் உத்தரவில்அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (கூட்டுறவுச் சங்களுக்கும் பொருந்தும்) -ன் சட்டப்பிரிவு எண் 35 A (1) உடன் இணைந்தபிரிவு 56-ன் கீழ் அளிக்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி, மேற்குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் உத்தரவை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் விருப்பத்திற்கிணங்க அவர்கள் பார்வையிடும் வண்ணம் மேற்குறிப்பிட்ட உத்தரவுகளின் பிரதி, வங்கியின் வளாகத்தில் அறிவிப்புப் பலகையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவுகள் பிறப்பித்ததை மட்டுமே கருத்தில் கொண்டு, இந்த வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டதாகக் கருதக்கூடாது. இந்த வங்கியானது நிதிநிலை மேம்படும்வரை வங்கி வர்த்தகத்தைக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத் தொடரலாம். சூழ்நிலைக்கேற்ப, இந்திய ரிசர்வ் வங்கி இந்த உத்தரவுகளில் மாற்றங்களைக் கொண்டுவரக் கருதலாம்.

ஷைலஜா சிங்
பொது மேலாளர்

செய்தி வெளியீடு: 2018-2019/1737

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்