சிட்டி கோ ஆபரேடிவ் வங்கி லிமிடெட், ஹாசன், கர்நாடகா - அபராதம் கர்நாடகா - அபராதம் |
தேதி: ஜனவரி 28, 2019
சிட்டி கோ ஆபரேடிவ் வங்கி லிமிடெட், ஹாசன், கர்நாடகா - அபராதம்
விதிக்கப் பட்டது
இந்திய ரிசர்வ் வங்கி, சிட்டி கோ ஆபரேடிவ் வங்கி லிமிடெட், ஹாசன் மீது ரூ. 50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 இன் (கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தும்), பிரிவு 47 A உடன் இணைந்த 46 (4) இன் பிரிவுகளின் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இயக்குநர்கள் அல்லது அவர்களின் குறிப்பிட்ட உறவினர்களுக்கு கடன் வழங்குவதில் ரிசர்வ் வங்கியின் தற்போதைய விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் விதித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிக்கு விளக்கம் கோரும் அறிவிப்பு அனுப்பியிருந்தது, அதற்கு பதிலளிக்கும் விதமாக வங்கி தனிப்பட்ட விசாரணையை கோரியது. நிகழ்வின் உண்மைகளையும், இந்த விஷயத்தில் வங்கியின் பதிலையும் பரிசீலித்த பின்னர், இந்திய ரிசர்வ் வங்கி மீறல்கள் நிரூபிக்கப்பட்டன என்றும் அபராதம் விதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது.
அஜித் பிரசாத்
உதவி ஆலோசகர்
செய்தி வெளியீடு: 2018-2019/1764 | |