பிதார் மஹிலா கோ ஆபரேடிவ் வங்கி லிமிடெட், பிதார், கர்நாடகா - அபராதம் விதிக்கப்பட்டது |
தேதி: பிப்ரவரி 04, 2019
பிதார் மஹிலா கோ ஆபரேடிவ் வங்கி லிமிடெட், பிதார், கர்நாடகா - அபராதம்
விதிக்கப்பட்டது
பிதார் மஹிலா கோ ஆபரேடிவ் வங்கி லிமிடெட், பிதாருக்கு இயக்குநர்கள் மற்றும் அவர்களின் குறிப்பிட்ட உறவினர்களுக்கு கடன் வழங்குவது தொடர்பான ரிசர்வ் வங்கியின் தற்போதைய விதிமுறைகளை மீறியதற்காக, வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும் வகையில்) பிரிவு 47 A உடன் இணைந்த பிரிவு 46 (4) இன் விதிகளின் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்திய ரிசர்வ் வங்கி ₹ 50,000/- (ஐம்பதாயிரம் ரூபாய் மட்டும்) அபராதம் விதித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிக்கு விளக்கம் கோரும் அறிவிப்பு அனுப்பியிருந்தது, அதற்கு பதிலளிக்கும் விதமாக வங்கி எழுத்துப்பூர்வ பதிலை சமர்ப்பித்தது. நிகழ்வின் உண்மைகளை பரிசீலித்த பின்னர், இந்திய ரிசர்வ் வங்கி மீறல்கள் நிரூபிக்கப்பட்டன என்றும் அபராதம் விதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது.
அஜித் பிரசாத்
உதவி ஆலோசகர்
செய்தி வெளியீடு: 2018-2019/1830 | |