Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (65.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 10/08/2007

தாராளமயமாக்கப்பட்ட பண அனுப்புதல் திட்டம் - ரிசர்வ் வங்கியின் பதில்கள்

தாராளமயமாக்கப்பட்ட பண அனுப்புதல் திட்டம் - ரிசர்வ் வங்கியின் பதில்கள்

 இந்தியாவில் குடியிருக்கும் நபர்களுக்கு எளிமையாக்கப்பட்ட தாராளமயமாக்கப்பட்ட அந்நிய செலாவணி வசதிகளை, இந்திய ரிசர்வ் வங்கி  தாராளமயமாக்கப்பட்ட பண அனுப்புதல் திட்டத்தின் மூலம் பிப்ரவரி 2004இல் அறிவித்தது.  அத்திட்டத்தின்கீழ் குடியிருப்பாளரான தனிநபர்கள், ஒரு நிதியாண்டிற்கு 1,00,000 அமெரிக்க டாலர் வரை அனுமதிக்கப்பட்ட முதலீட்டு மற்றும் நடப்புக்கணக்கு நடவடிக்கைகளுக்காக அனுப்பலாம். பிப்ரவரி 4, 2004இல் வெளியிடப்பட்ட A.P.(DIR வரிசை) சுற்றறிக்கை எண் 49ன்படி இத்திட்டம் அமலாக்கம் செய்யப்பட்டது.  இதுகுறித்த பின்தொடர்புத் தகவல்களை அங்கீகரிக்கப்பட்ட அந்நிய செலாவணி செயல்பாட்டு வங்கிகள் மற்றும் அந்நிய செலாவணி செயல்பாட்டு வணிகர்கள் சங்கம் இவற்றிடமிருந்து பெற்றது.  அதன்பேரில் நடத்தப்பட்ட விவாதங்களின் அடிப்படையில் அமலாக்கப்படுவதிலுள்ள ஐயப்பாடுக்களுக்கான விளக்கங்கள் பின் வருமாறு:

 கே. எண் 1.:     இத்திட்டத்தின்கீழ் அனுமதிக்கப்பட்ட முதலீட்டுக்கணக்கு நடவடிக்கைகள் எவையென்பது குறித்த விரிவான பட்டியலை அளிக்க முடியுமா ?

 பதில்: அனுமதிக்கப்பட்ட நடப்புக்கணக்கு அல்லது முதலீட்டுக்கணக்கு நடவடிக்கை அல்லது அவற்றின் கூட்டாக அமையும் எவற்றிற்கும் இத்திட்டம் பொருந்தும்.  ரிசர்வ் வங்கியின் முன் அனுமதியின்றியே இத்திட்டத்தின்கீழ் குடியிருப்பாளரான தனிநபர்கள் வெளிநாட்டில் அசையா சொத்து, பங்குகள், கடன்பத்திரங்கள் அல்லது வேறு எந்த சொத்துக்களையும் பெறலாம். தனிநபர்கள் வெளிநாட்டிலுள்ள வங்கிகளில் அந்நிய செலாவணி கணக்குகளைத் தொடங்கி, தொடர்ந்து நடத்தி அந்நிய செலாவணி இருப்பும் வைத்துக்கொள்ளலாம்.  ஆயினும் வணிக நடவடிக்கை இழப்பினை ஈடுகட்டும் தரகு செலுத்தவோ, அயல்நாட்டு பரிவர்த்தனை நிலையங்களில் இத்தகைய தரகு வகைகளுக்கு அழைப்பு விடுவதற்கோ, அயல்நாட்டு சரியெதிர் கூட்டாளிக்கு பணம் அனுப்பவோ இத்திட்டத்தில் அனுமதியில்லை. 

பின்வரும் விஷயங்களுக்கும் இத்திட்டத்தின்கீழ் அனுப்புதல் வசதி கிடையாது:

  •  லாட்டரிச்சீட்டு வாங்குதல், பந்தயங்கட்டுதல், தடைசெய்யப்பட்ட பத்திரிகைகளுக்கு சந்தா அனுப்புதல் போன்ற FEMA Rules 2000இன் பட்டியல் 1இல்  குறிப்பிடப்பட்ட தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் வரையறைக்குட்பட்ட FEMA Rules 2000இன் பட்டியல் 11இல்  குறிக்கப்பட்ட நடவடிக்கைகள்

  •   பூடான், நேபாளம், மொரிஷியஸ், பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு செலுத்தப்படும் நேரடியான அனுப்புதல்கள்

  • ஒத்துழைப்பில்லாத, தீவிரவாத நாடுகளென்று நிதியியல் சார்ந்த நடவடிக்கைக்கான செயலாக்க தனிப்படை (FATF)அடையாளங்காட்டிய நாடுகளுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ செலுத்தப்படும் அனுப்புதல்கள்

  •    தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட கணிசமான ஆபத்துடையது என்று ரிசர்வ் வங்கியால் தனியாக வங்கிக்கு அறிவுறுத்தப்பட்ட நபர் அல்லது அமைப்புக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ பணம் அனுப்புதல்

 கே.எண் 2: அனுப்புதல்கள் குறித்த பட்டியல் IIIஇல் உள்ள வசதிகளோடு கூடுதலாக இத்திட்டமும் செயல்படுத்தப்படுமா?

 பதில்: FEMA  (Current Account) விதிகள் 2000 பட்டியல் IIIஇல் உள்ளபடி, தனிப்பட்ட பயணம், வணிக ரீதியான பயணம், கல்வி, மருத்துவ சிகிச்சை முதலானவற்றிற்கு அளிக்கப்படும் வசதிகளோடு, இத்திட்டம் கூடுதலாக செயல்படுகிறது. 

 இத்திட்டம் அந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம்.  ஆயினும், நன்கொடை, அன்பளிப்பு ஆகியவற்றைத் தனியாக அளிக்காமல் இத்திட்டத்தின்கீழ் மட்டுமே அளிக்க வேண்டும்.  இதன்படி, குடியிருப்பாளர் தனிநபர்கள், ஒரு நிதியாண்டிற்கு இத்திட்டத்தின்கீழ் நன்கொடை மற்றும் அன்பளிப்பை 100,000 அமெரிக்க டாலர் வரை மட்டுமே அனுப்ப முடியும்.

 கே. எண் 3.                அயல்நாட்டு முதலீடுகளில் (வைப்பு, மற்றும் வேறுவகை முதலீடுகள்) கூடுதலாகக் கிடைத்த வருவாயை குடியிருப்பாளரான தனிநபர்கள் தாய்நாட்டிற்குக் கொண்டுவருதல் இத்திட்டத்தின்கீழ் அவசியமா?

 பதில்: இத்திட்டத்தின்கீழ் செய்யப்பட்ட முதலீடுகள் ஈட்டிய வருவாயைத் தக்கவைத்துக் கொண்டு, மீண்டும் மறுமுதலீடும் செய்யலாம்.  அந்த வருவாயைக் கட்டாயமாகத் தாய்நாட்டுக்கு எடுத்துவரவேண்டிய அவசியம் இத்திட்டத்தின்கீழ் தற்சமயம் இல்லை.

 கே. எண் 4.     இத்திட்டத்தின்கீழ் செய்யப்படும் அனுப்புதல்கள், மொத்த அடிப்படையில் அல்லது நிகர (திருப்பிக்கொண்டு வந்தது போக) அடிப்படையில் அமையுமா? 

பதில்: மொத்த அடிப்படையிலேயே அமையும். 

கே. எண் 5.       வயதுக்கு வராதோர் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாமா?

 பதில்: எல்லா குடியிருப்பாளர் தனிநபர்களுக்கும் வயதுக்கு வராதோர் உட்பட யாவருக்கும் இத்திட்டம் பொருந்தும்.

 கே. எண் 6.      ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கான அனுப்புதல்கள் ஒரு கூட்டாக இத்திட்டத்தின்கீழ் எடுத்துக் கொள்ளப்படுமா?

 பதில்: இத்திட்டத்தைப் பயன்படுத்தும் ஒரு குடும்பத்தைச் சார்ந்த தனிநபர்கள் இத்திட்டத்தின் சட்டதிட்டங்களை அனுசரிப்பதைப் பொறுத்து, அனுப்புதல்கள் கூட்டாக எடுத்துக் கொள்ளப்படலாம்.

 கே. எண் 7. நேரடியாகவோ, ஏலம் மூலமாகவோ, கலைப் பொருட்கள் (ஓவியங்கள் முதலானவை) வாங்கிட இத்திட்டம் பயன்படுமா ?

பதில்: நடைமுறையிலிருக்கும் அயல்நாட்டு வர்த்தகக் கொள்கை மற்றும் அதுபோன்ற பொருத்தமான சட்டங்களுக்குட்பட்டு கலைப்பொருட்கள் வாங்கிட இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 கே. எண் 8. நன்கொடை, அன்பளிப்பு போன்ற சிறியதொகையான 5000 அமெரிக்க டாலர் அனுப்புதல் வசதி, பெரிய அளவிலான 1,00,000 அனுப்புதலோடு கூடுதலாகக் கிடைக்குமா ?

 பதில்:  நன்கொடை, அன்பளிப்பு போன்றவைகளுக்காக அனுப்பும் வசதி ஏதும் தனியாகக் கிடையாது.  இத்திட்டத்தின் கீழே அதனைச் செய்யவேண்டும்.  அதனால் நன்கொடை, அன்பளிப்புக்கு என்று தனியாக உச்சவரம்பு ஏதும் கிடையாது.

 கே. எண் 9.  அனுப்புபவரின் சுய அறிவிப்பு அல்லது அனுப்புகின்ற நடவடிக்கையின் தன்மை என்ற இரண்டில் எதை அங்கீகரிக்கப்பட்ட வணிகர், பணம் அனுப்புதலை அனுமதிக்கச் சரி பார்க்க வேண்டும் ?

 பதில்: நடவடிக்கையின் இயல்பு பற்றி அனுப்புபவர் அளிக்கும் அறிவிப்பின் படியே அங்கீகரிக்கப்பட்ட வணிகர் செயல்படுகிறார். பணம் அனுப்புதல் ரிசர்வ் வங்கியின் அறிவுரைகளுக்கு ஏற்பவே உள்ளன என்றும் அங்கீகரிக்கப்பட்ட வணிகர் சான்றிதழ் அளிப்பர்

 கே. எண் 10: இத்திட்டத்தின்கீழ் ஒரு வாடிக்கையாளர், ஊழியர் பங்குரிமைகளை (ESOP) வாங்க பணம் அனுப்பலாமா ?

 பதில்: ஊழியர் பங்குரிமையின்கீழ் வழங்கப்படும் பங்குகளை வாங்கவும் இத்திட்டத்தைப் பயன்படுத்தலாம்.

கே. எண் 11. பங்குபத்திர வாங்கலில் ESOP (ஊழியர்களுக்கு வழங்கப்படும் பங்குரிமை) முறையோடு தொடர்புடைய ADR/GDR வகையிலான ஐந்தாண்டுக்கு 50,000 அமெரிக்க டாலர் என்ற வரம்பினைச் சேர்த்து, கூடுதலாக வாங்க இத்திட்டத்தின்கீழ் வழியுண்டா ? 

பதில்: ESOP முறையோடு  கூடிய ADR/GDR வகையோடு, கூடுதலாக இத்திட்டம், அனுப்புதல் வசதிகளை அளிக்கும்

 கே. எண் 12.  இயக்குநர்களுக்கான தகுதிப் பங்குகள் பெறும் முறைப்படி அயல்நாட்டுக்குழுமத்தின் அளிக்கப்பட்ட மூலதனத்தின் 1% அல்லது 20,000 அமெரிக்க டாலர் (எது குறைவோ) வரையான வரம்போடு கூடுதலாக இத்திட்டத்தின்கீழ் முதலீடு செய்ய வழியுண்டா ? 

பதில்:   தகுதி பங்குகள் வாங்குதலோடு கூடுதலாக இத்திட்டத்தின்கீழ் பண அனுப்புதல்கள் செய்யலாம்.

 கே. எண் 13. குடியிருப்பாளரான தனிநபர் பரஸ்பர நிதிகள் துணிகரநிதிகள் மதிப்பிடப்படா கடன்பத்திரங்கள் கடனுத்தரவாத பத்திரங்கள் இவற்றில் இத்திட்டத்தின்கீழ் முதலீடு செய்யலாமா ?

 பதில்: ஆம், இத்திட்டத்தின்கீழ் மேற்கண்டவற்றில் முதலீடு செய்யலாம்.  இத்திட்டத்தின்படி தொடங்கப்பட்ட வங்கிக்கணக்கில் இருந்தே இந்த முதலீடுகளைச் செய்யலாம். 

கே. எண் 14.  வெளிநாட்டிலிருக்கும்போது ஒரு குடியிருப்போரல்லாத தனிநபர் வாங்கிய கடனை இந்தியா திரும்பியபின் இத்திட்டத்தின்கீழ் அடைத்திட வழியுண்டா ?

 பதில்: இது அனுமதிக்கப்பட்ட செயலாகும்.

 கே. எண் 15.  குடியிருப்பாளரான தனிநபர் வெளிநாட்டிற்கு இத்திட்டத்தின்கீழ் பணம் அனுப்ப வருமான வரிக்கணக்கு எண்(PAN) வைத்திருப்பது கட்டாயத் தேவையா ?

 பதில்: இத்திட்டத்தின்கீழ் பணம் அனுப்பிட வருமான வரிக்கணக்கு எண்(PAN) வைத்திருப்பது கட்டாயமாகும்.

 கே. எண் 16. குடியிருப்பாளரான தனிநபர் வெளிநாட்டிற்கு தன் பெயரிலோ வேறொருவர் பெயரிலோ வரைவோலையைப் பெற்று (அனுமதிக்கப்பட்ட விவகாரங்களுக்காக) தனது சொந்த காரணங்களுக்கான (Private visit) பயணத்தின்போது அந்த வரைவோலையை வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்ல உறுதிமொழியின் பேரில் பணத்தை இத்திட்டத்தின்கீழ் செலுத்திட இயலுமா ?

 பதில்: இத்திட்டத்தின்கீழ் வடிவமைக்கப்பட்ட உறுதிமொழியின்பேரில் வரைவோலைகளைப் பெறப் பணம் செலுத்தலாம்.

அல்பனா கில்லவாலா

தலைமைப் பொது மேலாளர்

பத்திரிகை வெளியீடு 2007-2008/229

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்