தேதி: மார்ச் 22, 2019
டாட்பத்ரி கூட்டுறவு டவுன் பேங்க் லிமிடெட், டாட்பத்ரி, ஆந்திரா - அபராதம் விதிக்கப்பட்டது
இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 46 (4) உடன் இணைந்த பிரிவு 47 A (1) (c) விதிகளின் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி (கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தும்), வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 இன் பிரிவு 56 உடன் இணைந்த பிரிவு 6 (1) (g) மற்றும் பிரிவு 6 (1) (k) ஆகியவற்றின் விதிமுறைகளை மீறியதற்காக டாட்பத்ரி கூட்டுறவு டவுன் பேங்க் லிமிடெட், டாட்பத்ரி, ஆந்திராவின் மீது ரூ 2,00,000/- (ரூபாய் இரண்டு லட்சம் மட்டும்) பண அபராதம் விதித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிக்கு விளக்கம் கோரல் அறிவிப்பு அனுப்பியிருந்தது, அதற்கு பதிலளிக்கும் விதமாக வங்கி எழுத்துப்பூர்வ பதிலை சமர்ப்பித்தது. நிகழ்வின் உண்மைகளை பரிசீலித்தபின், இந்த விஷயத்தில் வங்கியின் பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையில், இந்திய ரிசர்வ் வங்கி மீறல்கள் நிரூபிக்கப்பட்டன என்றும் அபராதம் விதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது .
அஜித் பிரசாத்
உதவி ஆலோசகர்
செய்தி வெளியீடு: 2018-2019/2263 |