வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (AACs) இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் - இந்து கோ-ஆபரேடிவ் ஃபாங்க் லிமிடெட், பதான்கோட், பஞ்சாப் |
தேதி: மார்ச் 27, 2019
வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (AACs) இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள
வழிகாட்டுதல்கள் - இந்து கோ-ஆபரேடிவ் ஃபாங்க் லிமிடெட், பதான்கோட்,
பஞ்சாப்
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (AACs) பிரிவு 56 உடன் இணைந்த பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கி, பஞ்சாபில் உள்ள இந்து கோ-ஆபரேடிவ் ஃபாங்க் லிமிடெட், பதான்கோட், பஞ்சாபிற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி மார்ச் 25, 2019 அன்று வர்த்தகம் நிறைவடைந்ததிலிருந்து பொது மக்களின் நன்மைக்காக வழிகாட்டு உத்தரவுகளை வழங்கியுள்ளது. உத்தரவுகள் வங்கிக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. உத்தரவுகளின் விவரங்கள் வங்கியின் வலைத்தளத்திலும் வங்கியின் வளாகத்திலும் இடம் பெறும். இந்திய ரிசர்வ் வங்கி சூழ்நிலைகளைப் பொறுத்து உத்தரவுகளில் மாற்றங்களை பரிசீலிக்கலாம். எவ்வாறாயினும், இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட உத்தரவுகள் வங்கி உரிமத்தை ரத்து செய்வதாக கருதப்படமாட்டாது. வங்கி அதன் நிதி நிலை மேம்படும் வரை கட்டுப்பாடுகளுடன் வங்கி வணிகத்தை தொடரும்.
அஜித் பிரசாத்
உதவி ஆலோசகர்
செய்தி வெளியீடு: 2018-2019/2298 |
|