தேதி: மார்ச் 29, 2019
வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35Aஇன் துணைப்பிரிவு (2) இன் கீழ் அனைத்து உள்ளடக்கிய உத்தரவுகளையும் திரும்பப் பெறுதல் - ஸ்ரீ கணேஷ் சஹாகரி வங்கி லிமிடெட், நாசிக், மகாராஷ்டிரா
இந்திய ரிசர்வ் வங்கி, பொது நலனுக்காக, வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 (ஏஏசிஎஸ்)- த்தின் பிரிவு 56 உடன் இணைந்த பிரிவு 35A இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி மகாராஷ்டிராவின், ஸ்ரீ கணேஷ் சஹாகரி வங்கி லிமிடெட், நாசிக் நிறுவனங்களுக்கு ஏப்ரல் 01, 2013 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து வழிகாட்டுதல் உத்தரவுகளை வெளியிட்டது.
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தும் வகையில்) பிரிவு 35A இன் துணைப்பிரிவு (2) இன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கியிடம் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, மார்ச் 26, 2019 வரை வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் மகாராஷ்டிராவின், ஸ்ரீ கணேஷ் சகாரி வங்கி லிமிடெட் நாசிக் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனைவற்றையும் உள்ளடக்கிய வழிகாட்டுதல் உத்தரவுகளையும் ரிசர்வ் வங்கி, திரும்பப் பெற்றுள்ளது. இனிமேல் வங்கி வழக்கமான வங்கி வணிகத்தை தொடரும்.
அஜித் பிரசாத்
உதவி ஆலோசகர்
செய்தி வெளியீடு : 2018-2019/2316 |