தேதி: ஏப்ரல் 30, 2019
வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35A இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் – நீட்ஸ் ஆஃப் லைஃப் கோ ஆபரேடிவ் வங்கி லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா
மும்பை,மகாராஷ்டிராவில் உள்ள நீட்ஸ் ஆஃப் லைஃப் கோ ஆபரேடிவ் வங்கி லிமிடெட், அக்டோபர் 29, 2018 அன்று, வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து அக்டோபர் 26, 2018 தேதியிட்ட உத்தரவின்-படி ஆறு மாத காலத்திற்கு, ஆய்வுக்கு உட்பட்டு ஏப்ரல் 29, 2019 வரை வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளது.
2. இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 56 உடன் இணைந்த பிரிவு 35A இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி பொதுமக்களின் தகவலுக்காக இது அறிவிக்கப்படுகிறது. மேற்கண்ட வங்கிக்கு வழங்கப்பட்ட அக்டோபர் 26, 2018 தேதியிட்ட, ஏப்ரல் 29, 2019 ஆம் தேதி வரை செல்லுபடியாகும் உத்தரவு, மறுஆய்வுக்கு உட்பட்டு ஏப்ரல் 24, 2019 தேதியிட்ட உத்தரவின்படி. ஏப்ரல் 30, 2019 முதல் அக்டோபர் 29, 2019 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து நீட்டிக்கப்படும்.
3. வழிகாட்டுதல் உத்தரவின் மற்ற விதிமுறைகளும் நிபந்தனைகளும் மாறாமல் இருக்கும். மேற்கண்ட நீட்டிப்பை அறிவிக்கும் ஏப்ரல் 24, 2019 தேதியிட்ட உத்தரவின் நகல், வங்கியின் வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.
4. இவ்வாறு உத்தரவுகளில் திருத்தங்கள், மாற்றங்கள் வெளியிடப்படுவதன் காரணமாக, இந்திய ரிசர்வ் வங்கி, இந்த வங்கியின் நிதிநிலைமையில் முன்னேற்றம் கொண்டுவிட்டதாகக் கருதாது.
ஷைலாஜா சிங்
துணைப் பொது மேலாளர்
செய்தி வெளியீடு : 2018-2019/2562 |