தேதி: மே 13, 2019
கோம்தி நகாரியா சகாரி வங்கி லிமிடெட், ஜான்பூர், உத்தரபிரதேசத்துக்கு இந்திய
ரிசர்வ் வங்கி வெளியிட்ட உத்தரவுகளை திரும்பப்பெறுகிறது
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் 1949 இன் பிரிவு 35 A இன் கீழ் (AACS) கோம்தி நகாரியா சகாரி வங்கி லிமிடெட், ஜான்பூர், உத்தரபிரதேசத்திற்கு ஜூலை 03, 2017 தேதியிட்ட உத்தரவுகளை வெளியிட்டது. அக்டோபர் 30, 2018 தேதியிட்டு விதிக்கப்பட்ட உத்தரவுகள் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு கடைசியாக மே 10, 2019 வரை மாற்றியமைக்கப்பட்டன.
இந்திய ரிசர்வ் வங்கி, பொது நலனில் அவ்வாறு செய்ய வேண்டியது அவசியம் என்று கருதி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (2) இன் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுதி (AACS), இதன்மூலம் உத்தரபிரதேசத்தின் ஜான்பூரில் உள்ள கோமதி நகரியா சஹாரி வங்கி லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட (மற்றும் அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்ட) உத்தரவுகளை திரும்பப் பெறுகிறது.
உத்தரவின் நகல் வங்கியின் வளாகத்தில் ஆர்வமுள்ள பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்படும். இனிமேல் வங்கி தனது வழக்கமான வர்த்தகத்தை தொடரும்.
ஷைலஜா சிங்
துணைப் பொது மேலாளர்
செய்தி வெளீயீடு: 2018-2019/2661 |