மே 13, 2019
இந்திய ரிசர்வ் வங்கி தி நைனிடல் வங்கி லிமிடெட் மீது பண அபராதம் விதிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), மே 06, 2019 தேதியிட்ட உத்தரவின் பேரில், இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய குறிப்பிட்ட உத்தரவுகளை மீறி NPA அடையாளம் காணும் செயல்முறையை முழுமையாக தானியங்கிப்படுத்தத் தவறியது தொடர்பாக நைனிடால் வங்கி லிமிடெட் மீது ₹ 10 மில்லியன் பண அபராதம் விதித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றாத வங்கியின் தவறுகளை கருத்தில் கொண்டு, வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 46 (4) (i) உடன் படித்த பிரிவு 47A (1) (c) விதிகளின் கீழ் இந்த அபராதம் விதித்துள்ளது. இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கமாக இல்லை.
பின்னணி
மார்ச் 31, 2016 நிலவரப்படி வங்கியின் நிதி நிலை குறித்து சட்டரீதியான பரிசோதனையின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அதன் NPA அடையாள செயல்முறையை முழுமையாக தானியக்கமாக்க வங்கிக்கு ஒரு குறிப்பிட்ட உத்திரவுகள் வழங்கப்பட்டது. எவ்வாறாயினும், மேற்கூறிய வழிகாட்டு உத்திரவுகளுக்கு இணங்க வங்கி தவறிவிட்டது மற்றும் உத்திரவுகளுக்கு இணங்காததற்கு ஏன் அபராதம் விதிக்கப்படக்கூடாது என்பதற்கான காரணத்தைக் காட்டுமாறு அறிவுறுத்தி வங்கிக்கு ஒரு அறிவிப்பு (எஸ்.சி.என்) வழங்கப்பட்டது. வங்கியிடமிருந்து பெறப்பட்ட பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்டவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிக்கு பண அபராதம் விதிக்க முடிவு செய்தது
ஷைலஜா சிங்
துணைப் பொது மேலாளர்
செய்தி வெளீயீடு: 2018-2019/2663 |