தேதி: மே 14, 2019
ஜம்பேட்டா கோ ஆபரேடிவ் டவுன் பேங்க் லிமிடெட், ஜம்பேட்டா, ராஜமஹேந்திரவரம்,
ஆந்திரா - அபராதம் விதிக்கப்பட்டது
இந்திய ரிசர்வ் வங்கி ஜம்பேட்டா கோ ஆபரேடிவ் டவுன் பேங்க் லிமிடெட், ஜம்பேட்டா, ராஜமஹேந்திரவரம், ஆந்திராவிற்கு வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தும்) பிரிவு 46 (4) உடன் இணைந்த பிரிவு 47 A (1) (c) படி வங்கி, இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுகள் / அறிவுறுத்தல்கள் / ஸ்பேசிபைடு பாங்க் நோட்டுகளை (எஸ்.பி.என்) ஏற்றுக்கொள்வது மற்றும் பரிமாற்றம் தொடர்பான வழிகாட்டுதல்களை மீறியதற்காக, ₹ 50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) அபராதம் விதித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிக்கு ஒரு காரண அறிவிப்பை வெளியிட்டது, அதற்கு பதிலளிக்கும் விதமாக வங்கி எழுத்துப்பூர்வ பதிலை சமர்ப்பித்தது. வழக்கின் உண்மைகள், இந்த விஷயத்தில் வங்கியின் பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையை பரிசீலித்த பின்னர், இந்திய ரிசர்வ் வங்கி மீறல்கள் நிரூபிக்கப்பட்டன என்ற முடிவுக்கு வந்து அபராதம் விதிக்க உத்தரவாதம் அளித்தது.
ஷைலாஜா சிங்
துணைப் பொது மேலாளர்
செய்தி வெளியீடு: 2018-2019/2667 |