வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் - பத்மஸ்ரீ டாக்டர் விட்டல்ராவ் விகே பாட்டீல் கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், நாசிக், மகாராஷ்டிரா - கால நீட்டிப்பு |
மே 17, 2019
வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள
வழிகாட்டுதல்கள் - பத்மஸ்ரீ டாக்டர் விட்டல்ராவ் விகே பாட்டீல் கோ ஆபரேடிவ் பாங்க்
லிமிடெட், நாசிக், மகாராஷ்டிரா - கால நீட்டிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி, பொது நலனுக்காக, பத்மஸ்ரீ டாக்டர் விட்டல்ராவ் விகே பாட்டீல் கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், நாசிக், மகாராஷ்டிராவுக்கு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) இன் 35 A உடன் இணைந்த பிரிவு 56 இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி மே 19, 2018 அன்று வர்த்தகம் முடிவடைந்த நாளிலிருந்து வழிகாட்டுதல் உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இந்திய ரிசர்வ் வங்கி இப்போது மே 19, 2019 முதல் செப்டம்பர் 17, 2019 வரை நான்கு மாத காலத்திற்கு உத்தரவுகளை மேலும் நீட்டித்துள்ளது. வழிகாட்டுதலின் நகல் வங்கியின் வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். சூழ்நிலைகளைப் பொறுத்து இந்த வழிகாட்டுதல்களில் மாற்றங்களை ரிசர்வ் வங்கி பரிசீலிக்கலாம். ரிசர்வ் வங்கியின் மேற்கண்ட வழிமுறைகளின் உத்தரவுகள் பிறப்பித்ததை மட்டுமே கருத்தில் கொண்டு, வங்கியின் உரிமத்தை வங்கி ரத்து செய்வதாகக் கருதக்கூடாது. வங்கி அதன் நிதி நிலை மேம்படும் வரை வங்கி வர்த்தகத்தை கட்டுப்பாடுகளுடன் தொடரும்.
ஷைலஜா சிங்
துணை பொது மேலாளர்
செய்தி வெளியீடு: 2018-2019/2705 |
|