மே 23, 2019
யுனைடெட் இந்தியா கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், நாகினா, (யு.பி.) - அபராதம்
விதிக்கப்பட்டது
யுனைடெட் இந்தியா கோ ஆபரேடிவ் பாங்க் லிமிடெட், நாகினா, (உ.பி.) மீது இந்திய ரிசர்வ் வங்கி வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 இன் பிரிவு 47(1) (C) உடன் இணைந்த பிரிவு 46 (4) பொருளின்படி (கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தும்), உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்வதற்கான ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்கள் / வழிகாட்டுதல்களை மீறியதற்காகவும், ரிசர்வ் வங்கி ஆய்வு அறிக்கைக்கு இணக்க அறிக்கை சமர்ப்பிக்காதலாலும் ரூ. 50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) பண அபராதம் விதித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிக்கு விளக்கம் கோரல் அறிவிப்பு அனுப்பியிருந்தது, அதற்கு பதிலளிக்கும் விதமாக வங்கி எழுத்துப்பூர்வ பதிலை சமர்ப்பித்தது. நிகழ்வின் உண்மைகளை பரிசீலித்தபின், இந்த விஷயத்தில் வங்கியின் பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையில், இந்திய ரிசர்வ் வங்கி மீறல்கள் நிரூபிக்கப்பட்டன என்றும் அபராதம் விதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது.
அஜித் பிரசாத்
உதவி ஆலோசகர்
செய்தி வெளியீடு: 2018-2019/2748 |