தேதி: 03/05/2019
ஆர் பி ஐ தனது தங்க இருப்புக்களை பாதுகாப்பாக வைத்திருப்பது குறித்து தெளிவுபடுத்துகிறது
2014 ஆம் ஆண்டில் ஆர் பி ஐ தான் வைத்திருக்கும் தங்கத்தில் ஒரு பகுதியை வெளிநாடுகளுக்கு மாற்றுவது குறித்து அச்சு மற்றும் சமூக ஊடகங்களில் சில பிரிவுகளில் அறிக்கைகள் வந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகளுக்கு, தங்கத்தின் இருப்புக்களை வெளிநாடுகளில் பாங்க் ஆப் இங்கிலாந்து போன்ற பிற நாடுகளின் மத்திய வங்கிகளுடன் பாதுகாப்பாக வைத்திருப்பது ஒரு சாதாரண நடைமுறையாகும். ரிசர்வ் வங்கியால் இந்தியாவில் இருந்து 2014 அல்லது அதற்குப் பிறகும் தங்கம் மாற்றப்படவில்லை என்று மேலும் தெரிவிக்கிறோம். இவ்வாறு மேலே மேற்கோள் காட்டப்பட்ட ஊடக அறிக்கைகள் உண்மையில் தவறானவை.
யோகேஷ் தயால் தலைமை பொது மேலாளர்
செய்தி வெளியீடு: 2018-2019/2600
I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்