மகாராஷ்டிராவின் ஒஸ்மானாபாத், வசந்தாதா நகரி சஹாகரி பாங்க் லிமிடெட் மீது விதிக்கப்பட்ட வழிகாட்டு உத்தரவுகளின் நீட்டிப்பு |
ஜூன் 14, 2019
மகாராஷ்டிராவின் ஒஸ்மானாபாத், வசந்தாதா நகரி சஹாகரி பாங்க் லிமிடெட் மீது
விதிக்கப்பட்ட வழிகாட்டு உத்தரவுகளின் நீட்டிப்பு
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A (AACS) இன் இணைந்த பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) இன் கீழ், இந்தியா ரிசர்வ் வங்கி, பொது நலனுக்காக, நவம்பர் 13, 2017 அன்று வர்த்தகம் முடிவடைந்ததிலிருந்து மகாராஷ்டிராவின் ஒஸ்மானாபாத் வசந்த்தாதா நகரி சஹாகரி பாங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்திய ரிசர்வ் வங்கி தற்போது ஜூன் 14, 2019 முதல் செப்டம்பர் 13, 2019 வரை மூன்று மாத காலத்திற்கு வழிகாட்டு உத்தரவுகளை மேலும் நீட்டித்துள்ளது. வழிகாட்டு உத்தரவுகள் சில கட்டுப்பாடுகள் மற்றும் / வைப்புத்தொகையை திரும்பப் பெறுதல் / ஏற்றுக்கொள்வது குறித்த உச்சவரம்புகளை விதிக்கின்றன. ஆர்வமுள்ள பொது மக்களின் கவனத்திற்கு விரிவான வழிகாட்டு உத்தரவுககள் வங்கியின் வளாகத்தில் வைக்கப்படும். சூழ்நிலைகளைப் பொறுத்து இந்த வழிகாட்டுதல்களில் மாற்றங்களை இந்திய ரிசர்வ் வங்கி பரிசீலிக்கலாம். இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கண்ட வழிமுறைகளின் உத்தரவுகள் பிறப்பித்ததை மட்டுமே கருத்தில் கொண்டு, வங்கியின் உரிமத்தை வங்கி ரத்து செய்வதாகக் கருதக்கூடாது. வங்கி அதன் நிதி நிலை மேம்படும் வரை வங்கி வர்த்தகத்தை கட்டுப்பாடுகளுடன் தொடரும்.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2018-2019/2953 |
|