ஜூன் 18, 2019
இந்திய ரிசர்வ் வங்கி எச்.டி.எஃப்.சி பாங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு பண அபராதம் விதிக்கிறது
‘உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC / பணமோசடி தடுப்பு (AML) விதிமுறைகள்’ மற்றும் மோசடிகளைப் பற்றி புகாரளித்தல் குறித்து ரிசர்வ் வங்கி வழங்கிய வழிமுறைகளை பின்பற்றாததற்காக, எச்.டி.எஃப்.சி பாங்க் லிமிடெட் (தி பாங்க்) க்கு
ஜூன் 13, 2019 தேதியிட்ட உத்தரவின் படி இந்திய ரிசர்வ் வங்கி (ஆர் பி ஐ)
ரூ. 10 மில்லியன் அபராதம் விதித்துள்ளது. ஆர் பி ஐ வழங்கிய மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றாததற்காக 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 46 (4) (i) உடன் இணைந்த பிரிவு 47 ஏ (1) (C) இன் விதிகளின் படி, வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆர் பி ஐ அபராதம் விதித்துள்ளது
இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கத்தில் இல்லை.
பின்னணி
வெளிநாட்டு கரன்சியை அனுப்புவதற்காக சில இறக்குமதியாளர்களால் போலி பில்களை (BoE கள்) வங்கியில் சமர்ப்பித்தது குறித்து சுங்க அதிகாரிகளிடமிருந்து ஆர் பி ஐ ஒரு குறிப்பைப் பெற்றிருந்தது. இது தொடர்பாக ஆய்வு செய்தபோது, ‘கே.ஒய்.சி / ஏ.எம்.எல் விதிமுறைகள்’ மற்றும் மோசடிகளைப் புகாரளித்தல் ஆகியவற்றில் ஆர் பி ஐ யின் அறிவுறுத்தல்களை மீறுவது தெரியவந்ததால், மேற்கூறிய வழிமுறைகளுக்கு இணங்காததற்கு ஏன் பண அபராதம் விதிக்கக்கூடாது என்பதற்கான காரணத்தைக் காட்ட வங்கிக்கு ஓர் அறிவிப்பு வழங்கப்பட்டது.
வங்கியின் பதில், தனிப்பட்ட விசாரணையின் போது செய்யப்பட்ட வாய்வழி சமர்ப்பிப்புகள் மற்றும் தனிப்பட்ட விசாரணையின் பின்னர் வங்கி அளித்த கூடுதல் சமர்ப்பிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்ட பின்னர், ஆர் பி ஐ உத்தரவுகளுக்கு இணங்கவில்லை என்ற மேற்கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன மற்றும் பண அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு ஆர் பி ஐ வந்தது.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2018-2019/2974 |