ஜூன் 19, 2019
சௌத் இந்தியன் பாங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர் பி ஐ), ஜூன் 13, 2019 தேதியிட்ட உத்தரவின் மூலம், 'காரண்டீஸ் மற்றும் கோ அக்செப்டென்ஸ்' தொடர்பான உத்தரவுகளுக்கு இணங்காததற்காக, சௌத் இந்தியன் பாங்க் லிமிடெட் (தி பாங்க்) மீது ரூ. 1 மில்லியன் பண அபராதம் விதித்துள்ளது. ஆர் பி ஐ வழங்கிய மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றாததால், 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 46 (4) (I) உடன் இணைந்த பிரிவு 47 A (1) (C) இன் விதிகளின் கீழ் ஆர் பி ஐ க்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கத்தில் இல்லை.
பின்னணி
வங்கியால் அளிக்கப்பட்ட இன்வோக் செய்யப்பட்ட காரண்டிகளுக்கு வங்கி பணம் அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டி ஓர் அரசுத் துறை மற்றும் ஒரு தனியார் தரப்பினரிடமிருந்து புகாரை ஆர் பி ஐ பெற்றது. இது தொடர்பான ஆய்வில் 'காரண்டீஸ் மற்றும் கோ அக்செப்டென்ஸ்' குறித்த
ஆர் பி ஐ இன் உத்தரவுகளை மீறுவது தெரியவந்ததுவுடன், உத்தரவுகளை பின்பற்றாததிற்கும் மேற்கூறிய வழிமுறைகளுக்கு இணங்காததற்கும் ஏன் பண அபராதம் விதிக்கக்கூடாது என்பதற்கான காரணத்தைக் காட்ட வங்கிக்கு ஓர் அறிவிப்பு வழங்கப்பட்டது.
வங்கியின் பதில், தனிப்பட்ட விசாரணையின் போது செய்யப்பட்ட வாய்வழி சமர்ப்பிப்புகள் மற்றும் தனிப்பட்ட விசாரணையின் பின்னர் வங்கி அளித்த கூடுதல் சமர்ப்பிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்ட பின்னர், ஆர் பி ஐ உத்தரவுகளுக்கு இணங்கவில்லை என்ற மேற்கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன மற்றும் பண அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு ஆர் பி ஐ வந்தது.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2018-2019/2990 |