ஜூன் 25, 2019
வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (AACS) இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள
வழிகாட்டு உத்தரவுகள் - ஸ்ரீ ஆனந்த் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட். சின்சாவத்,
புனே, மகாராஷ்டிரா
இந்திய ரிசர்வ் வங்கி (ஜூன் 21, 2019 தேதியிட்ட உத்தரவின்படி) ஸ்ரீ ஆனந்த் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட். சின்சாவாட், புனே, மகாராஷ்டிராவை வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைத்துள்ளது. ரிசர்வ் வங்கி உத்தரவுகளின்படி, ஒவ்வொரு சேமிப்பு வங்கிக் கணக்கு அல்லது நடப்புக் கணக்கு அல்லது வேறு எந்த வைப்புக் கணக்கிலும் உள்ள மொத்த நிலுவைத் தொகையில் ₹1000 (ரூபாய் ஆயிரம் மட்டும்) தாண்டாத தொகையை டெபாசிட்டர்கள்/வைப்பாளர்கள் திரும்பப் பெற அனுமதிக்கப்படுவார்கள். இதன்மூலம், ஜூன் 21, 2019 அன்று வர்த்தகம் முடிந்ததிலிருந்து இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளில் குறிப்பிட்டுள்ளபடியன்றி, ஸ்ரீ ஆனந்த் கூட்டுறவு பாங்க் லிமிடெட், சின்சவாத், புனே, மகாராஷ்டிரா, கடன் மற்றும் முன் தொகைகளை அளிப்பதோ, புதுப்பிப்பதோ, ஏதேனும் முதலீடு செய்வதோ, கடனாக பணத்தைப் பெறுவது மற்றும் புது டெபாசிட்டுகளை ஏற்றுக்கொள்வது, ஏதேனும் பணம் பட்டுவாடா செய்வது, அல்லது பட்டுவாடா செய்ய ஒப்புக்கொள்வது, வேறு பொறுப்புகள் மற்றும் நிர்ப்பந்தங்களுக்காக அல்லது வேறு எதற்காகவோ பணம் செலுத்துதல், நிதிசார் ஒப்பந்தங்கள் / ஏற்பாடுகள் செய்துகொள்ளுதல், வங்கியின் சொத்துக்களில் எதையேனும் விற்றல், மாற்றல் ஏதேனும் மற்றும் இங்கு வழங்கப்பட்ட விதம் தவிர அவை சார்ந்த விவகாரங்களில் ஈடுபடுதல் கூடாது. ஜூன் 25, 2019 அன்று வங்கியின் வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து ஆறு மாத காலத்திற்கு இந்த உத்தரவுகள் நடைமுறையில் இருக்கும்.
ரிசர்வ் வங்கியின் உத்தரவுகளை வழங்கியுள்ளதால், ரிசர்வ் வங்கி வங்கியின் உரிமத்தை ரத்து செய்வதாகக் கருதக்கூடாது. வங்கி அதன் நிதி நிலை மேம்படும் வரை கட்டுப்பாடுகளுடன் வங்கி வணிகத்தை தொடரும். சூழ்நிலைகளைப் பொறுத்து இந்த உத்தரவுகளில் மாற்றங்களை ரிசர்வ் வங்கி பரிசீலிக்கலாம்.
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 ஏ இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் ரிசர்வ் வங்கியில் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி அறிவுறுத்தல்கள் விதிக்கப்பட்டுள்ளன. ஜூன் 21, 2019 தேதியிட்ட உத்தரவின் நகல் வங்கியின் வளாகத்தில் ஆர்வமுள்ள பொது மக்களின் கவனத்திற்காக வைக்கப்படுகிறது.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2018-2019/3034 |