ஜூன் 26, 2019
பொதுமக்கள் அனைத்து நாணயங்களையும் செல்ல தக்கவையாக தொடர்ந்து
ஏற்றுக்கொள்ளலாம்: ஆர் பி ஐ
இந்திய ரிசர்வ் வங்கி இந்திய அரசால் தயாரிக்கப்பட்ட நாணயங்களை புழக்கத்தில் விடுகிறது. இந்த நாணயங்கள் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளன. பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார - பல்வேறு கருப்பொருள்களை பிரதிபலிக்கும் வகையில் புதிய வடிவமைப்புகளில் உள்ள நாணயங்கள் மற்றும் புதிய வடிவமைப்புகளில் நாணயங்கள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படுகின்றன. நாணயங்கள் நீண்ட காலத்திற்கு புழக்கத்தில் இருப்பதால், வெவ்வேறு வடிவமைப்பு மற்றும் அளவுகளின் நாணயங்கள் ஒரே நேரத்தில் புழங்குகின்றன. தற்போது, 50 பைசா, ₹1/-, 2/-, 5/- மற்றும் 10/- நாணயங்கள் பல்வேறு அளவுகள், தீம் மற்றும் வடிவமைப்பு கொண்டவை புழக்கத்தில் உள்ளன.
இதுபோன்ற நாணயங்களின் உண்மை தன்மை குறித்து சில இடங்களில் சந்தேகம் இருப்பதாகக் கூறப்படுகிறது, இதன் விளைவாக சில வர்த்தகர்கள், கடை வைத்திருப்பவர்கள் மற்றும் பொது உறுப்பினர்கள் நாணயங்களை ஏற்றுக்கொள்ள தயக்கம் காட்டினர். இது நாட்டின் சில பகுதிகளில் நாணயங்களின் தங்கு தடையில்லா பயன்பாடு மற்றும் புழக்கத்திற்கு தடையாக உள்ளது.
இதுபோன்ற வதந்திளை நம்ப வேண்டாம் என்றும், இந்த நாணயங்களை அவர்களின் அனைத்து பரிவர்த்தனைகளிலும் எந்தவித தயக்கமும் இன்றி சட்டப்பூர்வமாக செல்லத்தக்கவையாக ஏற்றுக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறது.
பரிவர்த்தனைகளுக்கு நாணயங்களை ஏற்றுக்கொள்ளவும், அவற்றின் அனைத்து கிளைகளிலும் பரிமாற்றம் செய்யவும் இந்திய ரிசர்வ் வங்கி தனித்தனியாக வங்கிகளுக்கு தனது அறிவுறுத்தல்களை ஜூலை 2, 2018 தேதியிட்டு மீண்டும் ஜனவரி 14, 2019 அன்று புதுப்பிக்கப்பட்ட சுற்றறிக்கை DCM (NE) No.G-2/08.07.18/2018-19 மூலம் வலியுறுத்தியுள்ளது
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2018-2019/3056 |