ஜூன் 26, 2019
கோமதி நகாரியா சஹகரி பாங்க் லிமிடெட், ஜான்பூர் (யு.பி.) - அபராதம் விதிக்கப்பட்டது
இந்திய ரிசர்வ் வங்கி,1949-ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) பிரிவு 47 ஏ (1)(c) உடன் இணைந்த பிரிவு 46 (4) –இன் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி கோமதி நகாரியா சஹகரி பாங்க் லிமிடெட், ஜான்பூர், (உ.பி.) மீது ரூ. 2,00,000/ - (இரண்டு லட்சம் ரூபாய் மட்டும்) பண அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதமானது வருமான அங்கீகாரம், சொத்து வகைப்பாடு, வழங்குதல் மற்றும் பிற தொடர்புடைய விஷயங்கள் தொடர்பான ஆர் பி ஐ யின் அறிவுறுத்தல்கள் / வழிகாட்டுதல்களை மீறியதற்காக - யு.சி.பிக்கள், அன்செக்கியூர்ட் அட்வான்ஸ்களுக்கான அதிகபட்ச வரம்பை மீறுதல் மற்றும் உங்கள் வாடிக்கையாளர் அறிந்து கொள்ளுங்கள் (கே.ஒய்.சி) / பணமோசடி தடுப்பு (ஏ.எம்.எல்) வழிகாட்டுதல்களை மீறியதற்காக விதிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பண அபராதம் ஏன் விதிக்கக்கூடாது என்பதற்கான காரணத்தைக் காட்டுமாறு வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வழங்கியதற்கு வங்கியும் எழுத்துப்பூர்வமாக பதிலை சமர்ப்பித்தது. வங்கியிடமிருந்து பெறப்பட்ட பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையின் சமர்ப்பிப்புகளின் உண்மைகளை பரிசீலித்தபின், ரிசர்வ் வங்கி உத்தரவுகளுக்கு வங்கி இணங்கவில்லை என்ற மேற்கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன மற்றும் பண அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வந்தது.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2018-2019/3045 |