ஜூலை 04, 2019
அமநாத் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், பெங்களூரு- வங்கியியல் ஒழுங்குமுறை
சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் வழிகாட்டுதல் உத்தரவுகளை
நீட்டித்தல்
இந்திய ரிசர்வ் வங்கி, அமாநாத் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், பெங்களூரு வங்கிக்கு ஏப்ரல் 1, 2013 தேதியிட்ட உத்தரவின்படி வழிகாட்டுதல் உத்தரவுகளை வழங்கியது. அந்த உத்தரவு அவ்வபோது நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் கடைசியாக டிசம்பர் 21, 2018 அன்று நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்களின் நலனை கருதி, பொதுமக்களுக்கு தகவல் தரும் வகையில், மேலும் 6 மாதங்களுக்கு செல்லுபடி காலத்தை நீட்டிப்பது அவசியம் என்று கருதுகிறது.
அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் (கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தும் வகையில்) அதிகாரங்களை பயன்படுத்தி, பெங்களூரு அமனாத் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட, அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்ட ஏப்ரல் 1, 2013 தேதியிட்ட, கடைசியாக ஜூலை 04, 2019 வரை நீட்டிக்கப்பட்ட உத்தரவின் செல்லுபடி காலத்தை, ஜூலை 5, 2019 முதல் ஜனவரி 4, 2020 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு மறு ஆய்வுக்கு உட்பட்டு தொடர்ந்து நீட்டிக்கிறது.
வழிகாட்டுதல் உத்தரவின் மற்ற விதிமுறைகளும் நிபந்தனைகளும் மாறாமல் இருக்கும். இந்த வழிகாட்டுதல் உத்தரவு வெளியிடப்பட்டதன் காரணமாக, மேற்படி வங்கியின் உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துவிட்டதாகக் கருதக் கூடாது. அதன் நிதி நிலை முன்னேற்றமடையும் வரை கட்டுப்பாடுகளுக்குட்பட்டு, வங்கி தனது வர்த்தகத்தைத் தொடர்ந்திடும். சூழ்நிலைகளைப் பொறுத்து, இந்திய ரிசர்வ் வங்கி இந்த வழிகாட்டுதல்களை மாற்றியமைக்கலாம்.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/50 |