ஜூலை 2, 2019
இந்திய ரிசர்வ் வங்கி நான்கு வங்கிகளுக்கு பண அபராதம் விதிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), ஜூன் 25, 2019 தேதியிட்ட உத்தரவுப்படி, உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (கேஒய்சி) விதிமுறைகள் / பணமோசடி தடுப்பு (ஏஎம்எல்) தரநிலைகள் மற்றும் நடப்புக் கணக்குகளைத் துவக்குவது குறித்து ஆர்பிஐ வழங்கிய சில விதிமுறைகளுக்கு இணங்காததற்காக நான்கு வங்கிகளுக்கு பண அபராதம் விதித்துள்ளது:
வரிசை எண் |
வங்கியின் பெயர் |
அபராதத் தொகை (₹ மில்லியனில்) |
1. |
அலகாபாத் பாங்க் |
5 |
2. |
கார்ப்பரேஷன் பாங்க் |
2.5 |
3. |
பஞ்சாப் நேஷனல் பாங்க் |
5 |
4. |
யூகோ பாங்க் |
5 |
ஆர்பிஐ வழங்கிய மேற்கண்ட வழிமுறைகளை வங்கிகள் பின்பற்றத் தவறியதை கணக்கில் கொண்டு 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 46 (4) (i) உடன் படித்த பிரிவு 47 A (1) (c) விதிகளின் கீழ் ஆர்பிஐ க்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கத்தில் இல்லை.
பின்னணி
ஒரு புகாரின் அடிப்படையில், மேற்கூறிய வங்கிகளில் நான்கு நிறுவனங்களால் துவக்கப்பட்ட நடப்புக் கணக்குகளின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (கேஒய்சி) விதிமுறைகள் / பணமோசடி தடுப்பு (ஏஎம்எல்) தரநிலைகள் மற்றும் நடப்புக் கணக்குகளைத் துவக்குவது குறித்து ஆர் பி ஐ வழங்கிய சில விதிமுறைகளுக்கு இணங்க வங்கிகள் தவறிவிட்டன. கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், உத்தரவுகளை பின்பற்றாததற்காக ஏன் அபராதம் விதிக்கக்கூடாது என்பதற்கான காரணங்களைக் காட்டுமாறு வங்கிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட பதில்கள் மற்றும் தனிப்பட்ட விசாரணைகளின் போது சமர்ப்பிக்கப்பட்டவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்ட பின்னர், ரிசர்வ் வங்கி உத்தரவுகளுக்கு இணங்கவில்லை என்ற மேற்கூறிய குற்றச்சாட்டுகள் உண்மையானவை மற்றும் பண அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/26 |