ஜூலை 9, 2019
வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ்
உள்ள வழிகாட்டு உத்தரவுகள் - கோலிகட்டா மஹிளா கோஆப்ரேட்டிவ் பாங்க்
லிமிடெட், கொல்கத்தா
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின்(ஏஏசிஎஸ்) பிரிவு 56 உடன் இணைந்த பிரிவு 35 A இன் பிரிவு துணைப்பிரிவு (1) இன் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, பொதுமக்களின் தகவலுக்காக இது அறிவிக்கப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கோலிகட்டா மஹிளா கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், 8 டி கிருஷ்ணா லஹா லேன், கொல்கத்தா - 700 012, மேற்கு வங்கத்திற்கு சில வழிகாட்டு உத்தரவுகளை வெளியிட்டுள்ளது, இதன்மூலம், ஜூலை 9, 2019 அன்று வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து எழுத்துப்பூர்வமாக முன் ஒப்புதல் இல்லாமல், எந்தவொரு கடனையும் வழங்க முடியாது அல்லது புதுப்பிக்க முடியாது, எந்தவொரு முதலீடு செய்வதோ, நிதிகளின் மீது கடன் மற்றும் புதிய வைப்புகளை ஏற்றுக்கொள்ளுதல், செலவு செய்தல் அல்லது ஏதேனும் கட்டணம் செலுத்துதல், பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுதல் அல்லது வேறு எந்தவொரு சமரச உடன்படிக்கைகள், சொத்துக்களை விற்றல், மாற்றல் ஆகியவற்றை ஜூன் 27, 2019 தேதியிட்ட ஆர் பி ஐ யின் உத்தரவுககளில் அறிவிக்கப்பட்டுள்ளபடி அனுமதிக்கப்படும், அதன் நகல் வங்கியின் வளாகத்தில் ஆர்வமுள்ள பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு சேமிப்பு வங்கி அல்லது நடப்புக் கணக்கு அல்லது வேறு எந்த டெபாசிட் கணக்கிலும் உள்ள மொத்த இருப்புத் தொகையில். ரூ.1,000.00 (ரூபாய் ஆயிரம் மட்டும்) தாண்டாத தொகை, எந்த பெயரில் அழைக்கப்பட்டாலும், அத்தகைய வைப்புத்தொகை எங்கிருந்தாலும் ஒரு வைப்புத்தொகையாளரால் திரும்பப் பெற அனுமதிக்கப்படலாம்.
ஆர் பி ஐ யின் மேற்கண்ட வழிகாட்டுதல்களின் வெளியீட்டினால் இந்திய ரிசர்வ் வங்கி, வங்கி உரிமத்தை ரத்து செய்வதாகக் கருதக்கூடாது. வங்கி அதன் நிதி நிலை மேம்படும் வரை வங்கி வர்த்தகத்தை கட்டுப்பாடுகளுடன் தொடரும். சூழ்நிலைகளைப் பொறுத்து இந்த உத்தரவுகளின் மாற்றங்களை ரிசர்வ் வங்கி பரிசீலிக்கலாம். இந்த உத்தரவுகள் ஜூலை 9, 2019 அன்று வர்த்தக முடிவில் இருந்து ஆறு மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும், மேலும் அவை அவ்வபோது மறுபரிசீலனை செய்யப்படும்.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/99 |