ஆகஸ்ட் 14, 2019
சிவம் சஹாகரி பாங்க் லிமிடெட், இச்சல்கரஞ்சி, மாவட்டம் - கோலாப்பூர், மகாராஷ்டிரா
–க்கு வழங்கப்பட்டஉத்தரவுகள் - கால நீட்டிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி (மே 18, 2018 தேதியிட்ட உத்தரவின்படி) சிவம் சஹாகரி பாங்க் லிமிடெட், இச்சல்கரஞ்சி, மாவட்டம்: கோலாப்பூர், மகாராஷ்டிரா, மே 19, 2018 அன்று வர்த்தக முடிவில் இருந்து வழிகாட்டுதல் உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது.
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களின் தகவலுக்காக மேற்கூறப்பட்ட வழிகாட்டுதல் உத்தரவு ஆகஸ்ட் 05, 2019 தேதியிட்ட உத்தரவின்படி, மறுஆய்வுக்கு உட்பட்டு, அக்டோபர் 19, 2019 வரை தொடர்ந்து நீடிக்கும் என்று அறிவிக்கிறது.
நீட்டிக்கப்பட்ட காலத்தை அறிவிக்கும் மேற்கண்ட உத்தரவின் நகல், வங்கியின் வளாகத்தில் பொதுமக்களின் ஆய்வுக்காக வைக்கப்படும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய நீட்டிப்பு மற்றும் / அல்லது மாற்றியமைத்தல், ஆர் பி ஐ, வங்கியின் நிதி நிலையில் திருப்தி அடைந்தது என்பதைக் குறிக்காது.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/437
|