Download
the tamil
font
 
   எங்களைப் பற்றி     பயனுள்ள தகவல்கள்     வினாக்கள்     நிதி சார்ந்த கல்வி     புகார்கள்   பிற இணைப்புகள் 
முகப்பு >> பத்திரிகைக்குறிப்புகள் - Display
Note : To obtain an aligned printout please download the (194.00 kb ) version to your machine and then use respective software to print the story.
Date: 07/08/2019
வைஷ் கோஆபரெடிவ் கமர்ஷியல் பாங்க் லிமிடெட், நியூ டெல்லி நிறுவனத்திற்கு ஆர் பி ஐ உத்தரவுகளை நீட்டிக்கிறது

ஆகஸ்ட் 07, 2019

வைஷ் கோஆபரெடிவ் கமர்ஷியல் பாங்க் லிமிடெட், நியூ டெல்லி நிறுவனத்திற்கு
ஆர் பி ஐ உத்தரவுகளை நீட்டிக்கிறது

இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 56 உடன் (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) இணைந்த பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஆகஸ்ட் 28, 2015 தேதியிட்ட உத்தரவின்படி வைஷ் கோஆபரேடிவ் கமர்ஷியல் பாங்க் லிமிடெட், நியூ டெல்லி நிறுவனத்தை வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் வைத்துள்ளது. இந்த உத்தரவுகள் அவ்வபோது மாற்றியமைக்கப்பட்டு வந்த நிலையில், கடைசியாக ஆகஸ்ட் 08, 2019 வரை நீட்டிக்கப்பட்ட உத்தரவானது, ஆகஸ்ட் 09, 2019 முதல் பிப்ரவரி 08, 2020 வரை மேலும் ஆறு மாத காலத்திற்கு மறுபரிசீலனைக்குட்பட்டு தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது.

யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்

பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/374

 
  © இந்திய ரிசர்வ் வங்கி.

I.E.5, மற்றும் அதற்கு மேலுள்ளதில் பிரிதிறன் 1024x768 ஆக இருப்பின் தெளிவாகக் காணலாம்