வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள வழிமுறைகள் - பாக்யோதயா பிரண்ட்ஸ் அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட். வாருத், மாவட்டம்-அமராவதி, மகாராஷ்டிரா - கால நீட்டிப்பு |
ஜூலை 17, 2019
வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள
வழிமுறைகள் - பாக்யோதயா பிரண்ட்ஸ் அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட்.
வாருத், மாவட்டம்-அமராவதி, மகாராஷ்டிரா - கால நீட்டிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி, பொது நலன் கருதி, வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) பிரிவு 35 A இன் பிரிவு 1 (1) இணைந்த பிரிவு 56 இன் கீழ் அதற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி ஜனவரி 17, 2019 அன்று வர்த்தக முடிவில் இருந்து வாருத், மாவட்டம்-அமராவதி, மகாராஷ்டிரா, பாக்யோதயா வின் பிரண்ட்ஸ் அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தது. இந்திய ரிசர்வ் வங்கி இப்போது இந்த வழிகாட்டுதல்களை மதிப்பாய்வுக்குட்பட்டு ஜூலை 18, 2019 முதல் அக்டோபர் 17, 2019 வரை மேலும் மூன்று மாத காலத்திற்கு நீட்டித்துள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் சில கட்டுப்பாடுகள் மற்றும் / அல்லது வைப்புத்தொகையை திரும்பப் பெறுதல் / ஏற்றுக்கொள்வது குறித்த வரம்புள் குறித்த நிபந்தனைகளை விதிக்கின்றன. வழிகாட்டுதலின் நகல் வங்கியின் வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும். இந்திய ரிசர்வ் வங்கி சூழ்நிலைகளைப் பொறுத்து வழிகாட்டுதல்களில் மாற்றங்களைக் கொண்டுவர கருதலாம். இந்திய ரிசர்வ் வங்கி வங்கியின் உரிமத்தை ரத்து செய்வதற்காக இந்த வழிகாட்டுதல்களை வழங்கியது என கருதக்கூடாது. வங்கி அதன் நிதி நிலை மேம்படும் வரை கட்டுப்பாடுகளுடன் வணிகத்தை தொடரும்.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/179 |
|