செப்டம்பர் 10, 2019
வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) இன் கீழ் உள்ள பிரிவு 35 A உடன்
இணைந்த பிரிவு 56 இன் கீழ் வழிகாட்டுதல்கள் - காரட் ஜனதா சஹாகரி பாங்க்
லிமிடெட், காரட், மகாராஷ்டிரா - கால நீட்டிப்பு
காரட் ஜனதா சகாரி பாங்க் லிமிடெட், காரட் நவம்பர் 7, 2017 தேதியிட்ட DCBS.CO.BSD-1/D-4/12.22.126/2017-18 உத்திரவின்படி நவம்பர் 9, 2017 அன்று வர்த்தக முடிவில் இருந்து ஆறு மாத காலம் உத்தரவுகளின் கீழ் வைக்கப்பட்டது. மேற்கூறிய உத்தரவுகளின் செல்லுபடி காலம் கடைசியாக மார்ச் 07, 2019 தேதியிட்ட உத்தரவு DCBR.CO.AID/No.D-36/12.22.126/2018-19 ன்படி செப்டம்பர் 09, 2019 வரை நீட்டிக்கப்பட்டது.
2. இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் (கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) இன் பிரிவு 35A இன் துணைப்பிரிவு (1) உடன் இணைந்த பிரிவு 56 இன் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி காரட் ஜனதா சஹாகரி பாங்க் லிமிடெட், காரட்க்கு வழங்கப்பட்ட மார்ச் 07, 2019 தேதியிட்ட DCBR.CO.AID/No.D-36/12.22.126/2018-19 உத்தரவுகள் அவ்வபோது மாற்றியமைக்கப்பட்டு, கடைசியாக செப்டம்பர் 9, 2019 வரை நீட்டிக்கப்பட்ட உத்தரவானது, செப்டம்பர் 5, 2019 தேதியிட்ட DCBR.CO.AID/No.D-13/12.22.126/2019-20 உத்தரவுப்படி, செப்டம்பர் 10, 2019 முதல் மார்ச் 9, 2020 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு மதிப்பாய்வுக்கு உட்பட்டு தொடர்ந்து நீட்டிக்கப்படுகிறது என்பதை பொதுமக்களின் தகவலுக்காக அறிவிக்கிறது.
3. உத்தரவுகளின் கீழ் உள்ள பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாறாமல் இருக்கும்.
4. மேற்கண்ட நீட்டிப்பை அறிவிக்கும் செப்டம்பர் 5, 2019 தேதியிட்ட உத்தரவின் நகல் பொதுமக்களின் பார்வைக்காக வங்கியின் வளாகத்தில் வைக்கப்படும்.
5. இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய நீட்டிப்பு மற்றும் / அல்லது மாற்றியமைத்தல் களினால் வங்கியின் நிதி நிலையில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி திருப்தி அடைந்துள்ளது என்பதைக் குறிக்காது.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/658 |