செப்டம்பர் 25, 2019
யு.பி. சிவில் செக்ரெட்டெரியட் பிரைமரி கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், லக்னோ
(உத்தரபிரதேசம்) க்கு வழங்கப்பட்ட உத்தரவுகளின் செல்லுபடி காலத்தை ஆர்பிஐ
நீட்டிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) யு.பி. சிவில் செக்ரெட்டெரியட் பிரைமரி கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், லக்னோவுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டு உத்தரவுகளை செப்டம்பர் 26, 2019 முதல் மார்ச் 25, 2020 வரை ஆறு மாத காலத்திற்கு மதிப்பாய்வுக்கு உட்பட்டு நீட்டிக்கிறது. 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுரைச் சட்டம் (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் வழங்கப்பட்ட செப்டம்பர் 19, 2018 தேதியிட்ட உத்தரவின்படி செப்டம்பர் 25 ஆம் தேதி முதல் வங்கி வழிகாட்டு உத்தரவுகளின் கீழ் உள்ளது.
செப்டம்பர் 25, 2019 ஆம் தேதி வரை வழங்கப்பட்ட உத்தரவின் செல்லுபடி காலம் செப்டம்பர் 24, 2019 தேதியிட்ட உத்தரவின் படி செப்டம்பர் 26, 2019 முதல் மார்ச் 25, 2020 வரை ஆறு மாத காலத்திற்கு மறுஆய்வுக்குட்பட்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 24, 2019 தேதியிட்ட உத்தரவின் நகல் பொதுமக்களின் பார்வைக்காக வங்கியின் வளாகத்தில் வைக்கப்படும்.
ஆர்பிஐ யின் உத்தரவின் மாற்றமானது வங்கியின் நிதி நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் அல்லது பின்னடைவைக் குறிக்காது. சூழ்நிலைகளைப் பொறுத்து உத்தரவில் மாற்றங்களை ஆர்பிஐ பரிசீலிக்கலாம்.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/785 |