செப்டம்பர் 26, 2019
வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) வின் பிரிவு 35 A இன் கீழ் பஞ்சாப்
மற்றும் மகாராஷ்டிரா அர்பன் கோஆப்ரேடிவ் பாங்க் லிமிடெட், மும்பை,
மகாராஷ்டிராவிற்கு உள்ள வழிகாட்டுதல்கள் - வைப்பு கணக்குகளை திரும்பப் பெறும்
வரம்பில் தளர்வு
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா அர்பன் கோஆப்ரேடிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா, மல்டி ஸ்டேட் அர்பன் கோஆப்ரேடிவ் பாங்க், 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 56 உடன் இணைந்த பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் செப்டம்பர் 23, 2019 அன்று வர்த்தகம் முடிவுற்றதிலிருந்து, வைப்புத்தொகையாளர் பாதுகாப்பு நலன் கருதி, செப்டம்பர் 23, 2019 தேதியிட்ட உத்தரவு DCBS.CO.BSD-1/D-1/12.22.183/19-20 ன்படி அனைத்தையும் உள்ளடக்கிய வழிகாட்டு உத்திரவுகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. ஆர் பி ஐ யின் கவனதுக்கு சமீபத்தில் வந்த பல்வேறு மறைமுக கண்காணிப்பு அறிக்கைகளின் கீழ் பெரிய நிதி முறைகேடுகள், வங்கியின் உள் கட்டுப்பாடு மற்றும் அமைப்புகளின் தோல்வி மற்றும் அதன் வெளிப்பாடுகளை தவறாக / குறைவாக அறிக்கை செய்தது ஆகிய காரணங்களால் வழிகாட்டு உத்தரவுகள் அவசியமானது. ஆகையால், 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 56 உடன் இணைந்த பிரிவு 36 AAAவின் துணைப்பிரிவுகள் (1) மற்றும் (2) ஆகியவற்றின் கீழ் வங்கியின் நிர்வாகக் குழு ஆர் பி ஐ யால் கலைக்கப்பட்டு ஒரு நிர்வாகி நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக நிர்வாகி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
நிர்வாகியால் வழங்கப்பட்ட வங்கியின் சமீபத்திய வைப்புத்தொகை மற்றும் பணப்புழக்க சுயவிவரத்தின் துவக்க/ஆரம்ப மதிப்பீடுகளை ஆராய்ந்து ஆர் பி ஐ, வைப்புத்தொகையாளர்களின் நலனுக்காக உத்தரவுகளை மதிப்பாய்வு செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 26, 2019 தேதியிட்ட மாற்றியமைக்கப்பட்ட உத்தரவின்படி, வைப்புத்தொகையாளர்களின் ஒவ்வொரு சேமிப்பு வங்கி கணக்கு அல்லது நடப்புக் கணக்கு அல்லது வேறு எந்த டெபாசிட் கணக்கிலும் உள்ள மொத்த நிலுவைத் தொகையில் ரூ. 10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) (ஏற்கனவே திரும்பப் பெற்ற இடங்களில் 1,000/- உட்பட) தொகையை, செப்டம்பர் 23, 2019 தேதியிட்ட ரிசர்வ் வங்கி உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, திரும்பப்பெற அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த உத்தரவின் பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாறாமல் இருக்கும். மேற்கூறிய சலுகை/ தளர்வு மூலம், வங்கியின் வைப்புத்தொகையாளர்களில் 60% க்கும் அதிகமானோர் தங்கள் முழு கணக்கு நிலுவையையும் திரும்பப் பெற முடியும்.
வைப்புத்தொகையாளர்களின் இன்னலைக் குறைக்கும் நோக்கில் மேற்கண்ட சலுகை/தளர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆர் பி ஐ இந்த நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, மேலும் வங்கியின் வைப்பாளர்களின் நலனைப் பாதுகாக்க தேவையான கூடுதல் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும்.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/792 |