செப்டம்பர் 30, 2019
இரண்டு வங்கிசாரா நிதிநிறுவனங்கள் தங்கள் பதிவு சான்றிதழை ரிசர்வ்
வங்கியிடம் ஒப்படைக்கின்றன
பின்வரும் வங்கிசாரா நிதிநிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழை ஒப்படைத்துள்ளன. ஆகவே இந்திய ரிசர்வ் வங்கி, 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 45-1A (6) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, அவர்களின் பதிவு சான்றிதழை ரத்து செய்துள்ளது.
வ. எண் |
நிறுவனத்தின் பெயர் |
அலுவலக முகவரி |
CoR எண் |
CoR வழங்கப்பட்ட தேதி |
CoR ரத்து செய்த தேதி |
1. |
ஜாக்ரதி ட்ரேட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் |
3A, சேக்ஸ்பியர் சாரானி, 8வது மாடி, கொல்கத்தா – 700 071 |
B.05.06009 |
ஜனவரி 19, 2004 |
ஆகஸ்ட் 19, 2019 |
2. |
மதன் மோகன் லால் ஸ்ரீராம் பிரைவேட் லிமிடெட் |
II வது மாடி, A-பிளாக், 14, பேக்டர் ரோடு, சப்தார்ஜங் ஹாஸ்பிடல் அருகில், ரிங் ரோடு, நியூ டெல்லி |
B-14.02761 |
டிசம்பர் 04, 2002 |
செப்டம்பர் 05, 2019 |
எனவே 1934 – ஆம் வருடத்திய இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்பிரிவு 45-1 பகுதி (a)-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மேற்கண்ட கம்பெனிகள் வங்கிசாரா நிதி நிறுவன வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/833 |