அக்டோபர் 10, 2019
டொயோட்டா பைனான்சியல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு ரிசர்வ் வங்கி
பண அபராதம் விதிக்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), அக்டோபர் 09, 2019 தேதியிட்ட உத்தரவின் பேரில், டொயோட்டா பைனான்சியல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் (கம்பெனி) க்கு, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 'வங்கி சாரா நிதிநிறுவங்களில் மோசடிகளின் கண்காணிப்பு' தொடர்பான அறிவுறுத்தல்களைப் பின்பற்றாததற்காக ரூ. 5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934 (தி ஆர்பிஐ ஆக்ட்)பிரிவு 58B இன் துணைப்பிரிவு (aa) இன் உட்பிரிவு (5) உடன் இணைந்த 58 G பிரிவின் துணைப்பிரிவு (b) இன் பிரிவு (1) இன் விதிகளின் கீழ் ஆர்பிஐ க்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் வழிகாட்டுதல் உத்தரவுகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் வங்கி தனது வாடிக்கையாளர்களுடன் ஏற்படுத்தியுள்ள எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கில் அல்ல.
பின்னணி
ஜூலை-ஆகஸ்ட் 2018 ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் சட்டத்தின் பிரிவு 45 ன் கீழ் நிறுவனத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் போது, மோசடிகளை கண்காணிப்பது தொடர்பாக ஆர்பிஐ வழங்கிய பல்வேறு உத்தரவுகளுக்கு இணங்க நிறுவனம் தவறிவிட்டது என்று கண்டறியப்பட்டது. மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றாததற்காக ஏன் பண அபராதம் விதிக்கக்கூடாது என்பதற்கான காரணத்தைக் காட்டுமாறு அறிவுறுத்தி நிறுவனத்திற்கு அறிவிப்பு வழங்கப்பட்டது. நிகழ்வின் முழு உண்மைகளையும், நிறுவனத்தின் பதிலையும் தனிப்பட்ட விசாரணையின் போது சமர்ப்பிக்கப்பட்டவைகளையும் பரிசீலித்தபின், ஆய்வின் போது கண்டறியப்பட்ட மீறல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன மற்றும் பண அபராதம் விதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு ஆர்பிஐ வந்தது. அதன்படி ரூ. 5 லட்சம் பண அபராதம் நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்டது.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/910 |