அக்டோபர் 11, 2019
வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 ஏ இன் கீழ்
அனைத்து உள்ளடக்கிய உத்தரவுகளின் காலநீட்டிப்பு - முதோல் கோஆப்ரேட்டிவ் பாங்க்
லிமிடெட், முதோல்
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 56 உடன் இணைந்த பிரிவு 35 A இன் கீழ் ஏப்ரல் 2, 2019 தேதியிட்ட உத்தரவின்படி முதோல் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், முதோல், பாகல்கோட் மாவட்டம் ,கர்நாடகாவுக்கு வழிகாட்டு உத்தரவுகளை வெளியிட்டது.
முதோல் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், முதோல், பாகல்கோட் மாவட்டம், கர்நாடகாவுக்கு வழங்கப்பட்ட ஏப்ரல் 2, 2019, தேதியிட்ட உத்தரவின் செயல்பாட்டு காலத்தை நீட்டிக்க வேண்டியது பொது நலனுக்கு அவசியம் என்று இந்திய ரிசர்வ் வங்கி கருதுகிறது. அதன்படி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 56 உடன் இணைந்த பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, முதோல் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், முதோல், பாகல்கோட் மாவட்டம், கர்நாடகாவுக்கு வழங்கப்பட்ட ஏப்ரல் 2, 2019 தேதியிட்ட உத்தரவுகள் மதிப்பாய்வுக்கு உட்பட்டு அக்டோபர் 8, 2019 முதல் ஏப்ரல் 7, 2020 வரை மேலும் ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
வழிகாட்டுதல் உத்தரவின் மற்ற விதிமுறைகளும் நிபந்தனைகளும் மாறாமல் இருக்கும்.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு : 2019-2020/919 |