வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள வழிகாட்டுதல்கள் - வசந்தாதா நகரி சஹகாரி பாங்க் லிமிடெட், ஒஸ்மானாபாத், மகாராஷ்டிரா - உத்தரவுகளின் நீட்டிப்பு |
அக்டோபர் 16, 2019
வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ் உள்ள
வழிகாட்டுதல்கள் - வசந்தாதா நகரி சஹகாரி பாங்க் லிமிடெட், ஒஸ்மானாபாத்,
மகாராஷ்டிரா - உத்தரவுகளின் நீட்டிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி, பொது நலன் கருதி, வசந்தாதா சஹகாரி பாங்க் லிமிடெட் ஒஸ்மானாபாத், மகாராஷ்டிரா நிறுவனத்திற்கு வங்கியியல் ஒழுங்குமுறை சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) பிரிவு 35 A இன் துணைப் பிரிவு (1) ன் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி நவம்பர் 13, 2017 அன்று வர்த்தக முடிவிலிருந்து வழிகாட்டு உத்தரவுகளை வெளியிட்டது. இந்த உத்தரவுகள் அக்டோபர் 14, 2019 முதல் ஜனவரி 31, 2020 வரை மறு ஆய்வுக்குட்பட்டு மேலும் மூன்றரை மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகள் வைப்புத்தொகையை திரும்பப் பெறுதல் / ஏற்றுக்கொள்வது குறித்த சில கட்டுப்பாடுகள் மற்றும் / அல்லது உச்சவரம்புகளை விதிக்கின்றன. ஆர்வமுள்ள பொது மக்கள் பார்வைக்கு இவ்விரிவான உத்தரவுகள் வங்கியின் வளாகத்தில் வைக்கப்படும். இந்திய ரிசர்வ் வங்கி சூழ்நிலைகளைப் பொறுத்து உத்தரவுகளில் மாற்றங்களை பரிசீலிக்கலாம். இந்த உத்தரவுகள் வழங்கப்பட்டதால் இந்திய ரிசர்வ் வங்கி வங்கியின் உரிமத்தை ரத்து செய்வதாகக் கருதக்கூடாது. வங்கி அதன் நிதி நிலை மேம்படும் வரை, கட்டுப்பாடுகளுடன் வங்கி வணிகத்தை தொடரும்.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/963 |
|