அக்டோபர் 31, 2019
வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 (ஏஏசிஎஸ்) – பிரிவு 35A இன் கீழ்
வழிகாட்டுதல்கள் -சிகேபி கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா
சிகேபி கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மும்பை, மகாராஷ்டிரா ஏப்ரல் 30, 2014, தேதியிட்ட UBD.CO.BSD.I.No.D-34/12.22.035/2013-14 உத்தரவின் படி வழிகாட்டுதல் உத்தரவுகளின் கீழ் மே 2, 2014 அன்று வர்த்தகம் முடிவுற்ற நாளிலிருந்து வைக்கப்பட்டது. உத்தரவுகளின் செல்லுபடி காலம் அவ்வபோது நீட்டிக்கப்பட்டு கடைசியாக செப்டம்பர் 25, 2019 தேதியிட்ட DCBR.CO.AID/No.D-19/12.22.035/2019-20 உத்தரவின்படி மறு ஆய்வுக்கு உட்பட்டு அக்டோபர் 31, 2019 வரை நீட்டிக்கப்பட்டது.
இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம் –இன் பிரிவு 56 உடன் இணைந்த பிரிவு 35A இன் பிரிவு (1) இன் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, மேற்கண்ட வங்கிக்கு வழங்கப்பட்ட ஏப்ரல் 30, 2014 தேதியிட்ட உத்தரவு UBD.CO.BSD.I.No.D-34/12.22.035/2013-14, அவ்வபோது மாற்றியமைக்கப்பட்டு, கடைசியாக அக்டோபர் 31,2019 வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், அக்டோபர் 25, 2019 தேதியிட்ட DCBR.CO.AID/No.D-33/12.22.035/2019-20 உத்தரவின்படி நவம்பர் 01, 2019 முதல் ஜனவரி 31, 2020 வரை மேலும் மூன்று மாதங்களுக்கு மறு ஆய்விற்கு உட்பட்டு நீட்டிக்கப்படுகிறது என்பதை பொதுமக்களின் தகவலுக்காக தெரிவிக்கிறது.
மேற்கண்ட மாற்றங்களை அறிவிக்கும் அக்டோபர் 25, 2019 தேதியிட்ட DCBR.CO.AID/No.D-33/12.035/2019-20 உத்தரவின் நகல், பொது மக்களின் கவனத்திற்காக வங்கியின் வளாகத்தில் வைக்கப்படும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் மேற்கூறிய நீட்டிப்பு மற்றும் மாற்றியமைத்தல், ரிசர்வ் வங்கி, வங்கியின் நிதிநிலையில் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளது குறித்து திருப்தி அடைந்ததைக் குறிக்காது.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/1064 |