நவம்பர் 05, 2019
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட்
வைப்புதாரர்களுக்கான பணம் திரும்பப் பெறும் வரம்பை ரிசர்வ் வங்கி ₹ 50,000/-
ஆக உயர்த்துகிறது
இந்திய ரிசர்வ் வங்கி, அக்டோபர் 14, 2019 ஆம் தேதி முதல் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட் வைப்புதாரர்களின் கணக்குகளில் உள்ள மொத்த நிலுவைத் தொகையில் ரூ. 40,000/- (நாற்பதாயிரம் ரூபாய் மட்டும்) திரும்பப் பெற அனுமதி அளித்ததை நினைவு கூரலாம்.
இந்திய ரிசர்வ் வங்கி, மேற்கூறப்பட்ட வங்கியின் பணப்புழக்க நிலை மற்றும் அதன் வைப்புதாரர்களுக்கு பணம் செலுத்துவதற்கான திறன் ஆகியவற்றை மதிப்பாய்வு செய்த பின்னர் முன்பு அனுமதிக்கப்பட்ட ரூ. 40,000/- உட்பட, பணம் திரும்பப் பெறுவதற்கான வரம்பை ரூ. 50,000/- (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) ஆக உயர்த்துவதற்கு முடிவு செய்துள்ளது. மேற்கண்ட தளர்வு மூலம், வங்கியின் வைப்புதாரர்களில் 78% க்கும் அதிகமானோர் தங்கள் முழு கணக்கு நிலுவையையும் திரும்பப் பெற முடியும்.
வைப்புதாரர்கள் வங்கியின் சொந்த ஏடிஎம்களில் இருந்து நிர்ணயிக்கப்பட்ட ரூ. 50,000/- வரம்பிற்குள் பணம் எடுத்துக்கொள்ள அனுமதியளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது பணம் திரும்பப் பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி இந்த நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருவதுடன் வங்கியின் வைப்புதாரர்களின் நலனைப் பாதுகாக்கத் தேவையான கூடுதல் நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும்.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/1110 |