நவம்பர் 05, 2019
மெஹ்சானா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மெஹ்சானா, குஜராத் மீது
இந்திய ரிசர்வ் வங்கி பண அபராதம் விதிக்கிறது
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), நவம்பர் 04, 2019 தேதியிட்ட உத்தரவின் பேரில், மெஹ்சானா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், மெஹ்சானா, குஜராத் (தி பாங்க்) –க்கு 'இயக்குநர்கள், உறவினர்கள் மற்றும் நிறுவனங்கள்/அவர்களுக்கு ஈடுபாடுள்ள தொழில்களுக்கான கடன்கள் மற்றும் முன்பணம் வழங்குதல்’ தொடர்பான உத்தரவுகளுக்கு இணங்காததற்காகவும் மற்றும் 'உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்து கொள்ளுங்கள்(கேஒய்சி)’ தொடர்பான முதன்மை உத்தரவுகளை கடைப்பிடிக்காதற்காகவும் 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதம் 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 47 A (1) (c) உடன் இணைந்த பிரிவுகள் 46(4)(i) மற்றும் பிரிவு 56 இன் கீழ் ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஆர்பிஐ வழங்கிய மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றாததற்காக விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை ஒழுங்குமுறை இணக்கத்தின் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் வங்கி அதன் வாடிக்கையாளர்களுடன் கையெழுத்திட்ட எந்தவொரு பரிவர்த்தனை அல்லது ஒப்பந்தத்தின் செல்லுபடியை பாதிக்கும் நோக்கத்தில் இல்லை.
பின்னணி
ஆர்பிஐ நடத்திய, மார்ச் 31, 2018 நிலவரப்படியான வங்கியின் நிதி நிலை குறித்த சட்டரீதியான ஆய்வில், ‘இயக்குநர்கள், உறவினர்கள் மற்றும் நிறுவனங்கள் / அவர்களுக்கு ஈடுபாடுள்ள தொழில்களுக்கான கடன்கள் மற்றும் முன்பணங்கள் வழங்குதல்’, ‘வெளிப்பாடு விதிமுறைகள் மற்றும் சட்டரீதியான / பிற கட்டுப்பாடுகள் - யு.சி.பி.க்கள்’, ‘இயக்குநர்களுக்கான கடன்கள் மற்றும் முன்பணங்கள் போன்றவை - இயக்குநர்கள் ஜாமீன் / உத்தரவாதம்-தெளிவுப்படுத்துதல்-யு.சி.பி.க்கள்’, ‘கடன் வெளிப்பாடு விதிமுறைகள் மற்றும் கடன்கள் மற்றும் முன்பணங்கள் குறித்த சட்டரீதியான / பிற கட்டுப்பாடுகள்’, ‘வைப்புத்தொகையாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி திட்டம், 2014 - வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 26 A - செயல்பாட்டு வழிகாட்டுதல்கள்’, ‘பிரைமரி(அர்பன்) கூட்டுறவு வங்கிகள் (யு.சி.பி) பிற வங்கிகளில் வைப்புத்தொகை வைப்பது’ மற்றும் ‘உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (கே.ஒய்.சி)’ குறித்த முதன்மை வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட பல்வேறு சுற்றறிக்கைகளில் உள்ள ஆர்பிஐயின் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்காதது தெரியவந்தது. மேற்கூறிய வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காததற்காக ஏன் பண அபராதம் விதிக்கக்கூடாது என்பதற்கான காரணத்தைக் காட்ட வங்கிக்கு ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. வங்கியின் பதில் மற்றும் தனிப்பட்ட விசாரணையின் போது செய்யப்பட்ட வாய்வழி சமர்ப்பிப்புகளை பரிசீலித்தபின், ஆர்பிஐ வழங்கிய ‘இயக்குநர்கள், உறவினர்கள் மற்றும் நிறுவனங்கள் / அவர்களுக்கு ஈடுபாடுள்ள தொழில்களுக்கான கடன்கள் மற்றும் முன்பணங்கள் வழங்குதல்’ மற்றும் ‘உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள் (கேஒய்சி)' விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என்ற மேற்கூறிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன மற்றும் பண அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு இந்திய ரிசர்வ் வங்கி வந்தது.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/1112 |