நவம்பர் 8, 2019
மில்லத் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், தாவங்கரே – 1949 ஆம் ஆண்டு
வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டம்(ஏஏசிஎஸ்) இன் பிரிவு 35 A இன் கீழ்
அனைத்து உள்ளடக்கிய உத்தரவுகளையும் நீட்டித்தல்.
இந்திய ரிசர்வ் வங்கி, பொது நலன் கருதி, மில்லத் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், தாவங்கரே, கர்நாடகாவுக்கு வழங்கப்பட்ட ஏப்ரல் 26, 2019 தேதியிட்ட DCBS.CO.BSD-III.No.D-12/12.23.096/2018-19 உத்தரவின் செயல்பாட்டு காலத்தை நீட்டிக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறது என்பதை பொதுமக்களின் தகவலுக்காக அறிவிக்கிறது.
அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின்(கூட்டுறவு சங்கங்களுக்கும் பொருந்தும்) பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) இன் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, மில்லத் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட், தாவங்கரே, கர்நாடகா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஏப்ரல் 29, 2019 தேதியிட்ட DCBS.CO.BSD–III.No.D-12/12.23.096/2018-19 உத்தரவின் நவம்பர் 07 வரையான செயல்பாட்டு காலத்தை மதிப்பாய்வுக்கு உட்பட்டு நவம்பர் 08, 2019 முதல் மே 07, 2020 வரை தொடர்ந்து ஆறு மாத காலத்திற்கு நீட்டிக்கிறது.
உத்தரவின் கீழ் உள்ள பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாறாமல் இருக்கும். ஆர்பிஐ வழங்கியுள்ள மேற்கண்ட வழிபாட்டு உத்தரவுகளை மட்டுமே கருத்தில் கொண்டு, வங்கியின் உரிமத்தை ஆர்பிஐ ரத்து செய்வதாகக் கருதக்கூடாது. வங்கி அதன் நிதி நிலை மேம்படும் வரை வங்கி வர்த்தகத்தை கட்டுப்பாடுகளுடன் தொடரும். சூழ்நிலைகளைப் பொறுத்து இந்த உத்தரவுகளில் மாற்றங்களை ரிசர்வ் வங்கி பரிசீலிக்கலாம்.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/1148 |