நவம்பர் 18, 2019
1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A உடன்
இணைந்த பிரிவு 56 இன் கீழ் உள்ள உத்தரவுகள்- மாபுசா அர்பன்
கோஆப்ரேட்டிவ் பாங்க் ஆஃப் கோவா லிமிடெட் - உத்தரவுகளின் கால நீட்டிப்பு
இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A உடன் இணைந்த பிரிவு 56 இன் கீழ் மாபுசா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் ஆஃப் கோவா லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஜூலை 24, 2015 தேதியிட்ட DCBS.CO.BSD-I No.D-06/12.22.156/2015-16 உத்தரவுகளை, அவ்வபோது மாற்றியமைத்து, கடைசியாக ஆகஸ்ட் 13, 2019 தேதியிட்ட DCBR.CO.AID/D-08/12.22.156/2019-20 உத்தரவின்படி நவம்பர் 18, 2019 வரை நீட்டித்திருந்தது.
இந்திய ரிசர்வ் வங்கி, மாபுசா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் ஆஃப் கோவா லிமிடெட் நிறுவனத்திற்கு ஜூலை 24, 2015 தேதியிட்டு வழங்கப்பட்ட, அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு வந்த DCBS.CO.BSD-I No.D-06/12.22.156/2015-16 உத்தரவுகளை, பொது நலனில் திருப்தி அடைந்து, மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறது. அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கி, 1949 ஆம் ஆண்டு வங்கியியல் ஒழுங்குமுறைச் சட்டத்தின் பிரிவு 35 A இன் துணைப்பிரிவு (1) உடன் இணைந்த பிரிவு 56 இன் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, மாபுசா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் ஆஃப் கோவா லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஜூலை 24, 2015 தேதியிட்ட DCBS.CO.BSD-I No.D-06/12.22.156/2015-16 உத்தரவை அவ்வப்போது மாற்றியமைத்து அதன் செல்லுபடி காலத்தை கடைசியாக நவம்பர் 18, 2019 வரை நீட்டித்திருந்த நிலையில், நவம்பர் 19, 2019 முதல் பிப்ரவரி 18, 2020 வரை மேலும் மூன்று மாதங்களுக்கு அவ்வுத்தரவுகளைத் தொடர்ந்து நீட்டிக்கிறது.
அவ்வபோது மாற்றியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் கீழ் உள்ள பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மாறாமல் இருக்கும்.
யோகேஷ் தயால்
தலைமை பொது மேலாளர்
பத்திரிக்கை வெளியீடு: 2019-2020/1211 |